“பள்ளிகளுக்கு மாணவர்கள் கட்டாயம் வர வேண்டுமென உத்தரவிட முடியாது” – சுப்ரீம் கோர்ட் அதிரடி!

 

“பள்ளிகளுக்கு மாணவர்கள் கட்டாயம் வர வேண்டுமென உத்தரவிட முடியாது” – சுப்ரீம் கோர்ட் அதிரடி!

கொரோனா பரவல் காரணமாக கடந்த ஒன்றரை ஆண்டுகளாக பள்ளிகள் திறக்கப்படாமல் இருந்தன. மாணவர்கள் ஆன்லைன் மூலமாகவே வகுப்புகளைக் கவனித்து வந்தனர். முதல் அலை முடிவுற்ற போது ஒரு மாத காலத்திற்கு மீண்டும் பள்ளிகள் திறக்கப்பட்டன. ஆனால் இரண்டாவது அலை வந்துவிட்டதால் மீண்டும் மூடப்பட்டது. இரண்டாவது அலையில் மிக மோசமாகப் பாதிக்கப்பட்ட மாநிலங்களில் டெல்லியும் ஒன்று. அங்கும் பள்ளிகள் மூடப்பட்டது. தற்போது கொரோனா பரவல் குறைந்துவிட்டதால் 9 முதல் 12ஆம் வகுப்பு வரையிலான பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளன.

“பள்ளிகளுக்கு மாணவர்கள் கட்டாயம் வர வேண்டுமென உத்தரவிட முடியாது” – சுப்ரீம் கோர்ட் அதிரடி!

ஆனால் பள்ளிக்கு வர மாணவர்கள் கட்டாயப்படுத்தப்படவில்லை. அதேபோல தொடக்கம் மற்றும் நடுநிலைப் பள்ளிகள் திறக்கப்படாமல் அம்மாணவர்களுக்கு ஆன்லைன் மூலமே வகுப்புகள் நடைபெற்று வருகிறது. இச்சூழலில் டெல்லியில் அனைத்துப் பள்ளிகளையும் திறக்கக் கோரி அம்மாநிலத்தைச் சேர்ந்த 12ஆம் வகுப்பு மாணவர் அமர் பிரேம் பிரகாஷ் உச்ச நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடர்ந்தார். அவர் தாக்கல் செய்த மனுவில், “பெரும்பான்மையான மாணவர்களின் உணர்வின் ஒட்டுமொத்த குரலாக இந்த வழக்கை தொடுக்கிறேன்.

“பள்ளிகளுக்கு மாணவர்கள் கட்டாயம் வர வேண்டுமென உத்தரவிட முடியாது” – சுப்ரீம் கோர்ட் அதிரடி!

பிற்படுத்தப்பட்ட மற்றும் ஏழை மாணவர்கள் ஆன்லைன் வழிக் கல்வியைப் பெற வசதியில்லாத நிலையில் உள்ளனர். வசதி படைத்த மாணவர்கள் செல்போன், லேப்டாப் மூலம் கல்வி கற்க முடியும். ஆனால் ஏழைகள் அன்றாட வாழ்க்கைக்கே கஷ்டப்பட்டுக் கொண்டிருக்கையில் அவர்களால் எவ்வாறு கல்வியைக் கற்க முடியும்? பள்ளிகளை மீண்டும் திறக்காதது மாணவர்களின் நலன்களுக்கு தீங்கு விளைவிப்பது மட்டுமல்லாமல், பாகுபாட்டையும் வளர்த்தெடுக்கிறது. மாணவர்களின் மனதைப் பாதிக்க செய்கிறது. ஆகவே அனைத்து வகுப்புகளையும் திறக்க அரசுக்கு உத்தரவிட வேண்டும்” என்று குறிப்பிட்டிருந்தார்.

இந்த மனு நீதிபதிகள் சந்திரசூட், நாகரத்னா ஆகியோர் முன்னிலையில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது கருத்து தெரிவித்த நீதிபதிகள், “உலக நாடுகள் பலவற்றில் மீண்டும் பள்ளிகள் திறக்கப்பட்டன. ஆனால் தொற்றுகள் அதிகரித்தன. மீண்டும் மூடப்பட்டன. இரண்டாவது அலையில் இந்தியா மிக மோசமான பாதிப்பைச் சந்தித்ததை அறிவீர்கள். மூன்றாவது அலைக்கு வேறு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதனால் தான் அரசுகள் யோசித்து முடிவெடுக்கின்றன. அவர்களுக்குள்ளும் பள்ளிகளைத் திறக்க ஆசை தான். ஆனால் திறந்து தொற்றுகள் அதிகரித்து நிலைமை சிக்கலாகலாம் என்று யோசிக்கிறார்கள்.

“பள்ளிகளுக்கு மாணவர்கள் கட்டாயம் வர வேண்டுமென உத்தரவிட முடியாது” – சுப்ரீம் கோர்ட் அதிரடி!

ஆகவே மாநில அரசுகளின் கொள்கை முடிவில் நாங்கள் தலையிட முடியாது. எந்த உத்தரவையும் பிறப்பிக்க முடியாது. மாணவர்கள் அனைவரையும் பள்ளிக்கு வருமாறு கட்டாயப்படுத்தவும் உத்தரவிட முடியாது. இதில் முடிவெடுக்க மாநில அரசுகளுக்குத் தான் முழு உரிமை இருக்கிறது. ஆகவே மாணவர்களிடம் படிப்பில் கவனம் செலுத்த சொல்லுங்கள். அது போதும். இந்த வழக்கு பப்ளிஷிட்டிக்காக தொடரப்பட்டது என்று நாங்கள் சொல்லவில்லை. உங்களின் நோக்கம் புரிகிறது. ஆனால் மாணவர்களின் நலனும் முக்கியம்” என்று கூறி வழக்கை முடித்துவைத்தனர்.