வேளாண் செஸ் விதிப்பு… பயப்படாதீங்க பெட்ரோல், டீசல் விலை உயராது… நிர்மலா சீதாராமன் விளக்கம்..

வேளாண் செஸ் விதிப்பு… பயப்படாதீங்க பெட்ரோல், டீசல் விலை உயராது… நிர்மலா சீதாராமன் விளக்கம்..

பெட்ரோல், டீசல் மீது வேளாண் செஸ் விதிப்பால், நுகர்வோர் கூடுதல் பணம் செலுத்த தேவையில்லை என்று நிர்மலா சீதாராமன் விளக்கம் கொடுத்துள்ளார்.

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், மத்திய பட்ஜெட்டில் பெட்ரோல் மற்றும் டீசல் மீது வேளாண் உள்கட்டமைப்பு மற்றும் மேம்பாட்டு செஸ் (ஏ.ஐ.டி.சி.) விதிக்கப்படும் என்று அறிவித்தார். அதாவது ஒரு லிட்டர் பெட்ரோல் மீது ரூ.2.50-ம், டீசல் மீது ரூ.4-ம் செஸ் (ஏ.ஐ.டி.சி.) விதிக்கப்படும். ஏற்கனவே பெட்ரோல், டீசல் கடுமையாக உயர்ந்துள்ள நிலையில், இந்த செஸ் விதிப்பால் அவற்றின் விலையை மேலும் அதிகரிக்கும் என்று அனைத்து தரப்பினரும் அதிருப்தி அடைந்தனர்.

வேளாண் செஸ் விதிப்பு… பயப்படாதீங்க பெட்ரோல், டீசல் விலை உயராது… நிர்மலா சீதாராமன் விளக்கம்..
நிர்மலா சீதாராமன்

ஆனால் செஸ் விதிப்பால் வாடிக்கையாளர்களுக்கு எந்தவித பிரச்சினையும் கிடையாது. அவர்கள் கூடுதல் பணம் செலுத்த வேண்டியது இருக்காது என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் விளக்கம் கொடுத்துள்ளார். மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நேற்று செய்தியாளர்கள் சந்திப்பின்போது கூறியதாவது: பெட்ரோல் மற்றும் டீசல் மீது வேளாண் உள்கட்டமைப்பு மற்றும் மேம்பாட்டு செஸ் விதிப்பால், கூடுதல் செலவுகளை நுகர்வோர் சுமக்கக்கூடாது என்பதற்காக உரிய விடாமுயற்சி செய்யப்பட்டுள்ளது.

வேளாண் செஸ் விதிப்பு… பயப்படாதீங்க பெட்ரோல், டீசல் விலை உயராது… நிர்மலா சீதாராமன் விளக்கம்..
பெட்ரோல் பங்கு

பெட்ரோல் மற்றும் டீசல் மீது வேளாண் உள்கட்டமைப்பு மற்றும் மேம்பாட்டு செஸ் விதிக்கப்பட்டதன் விளைவாக, அவற்றின் (பெட்ரோல், டீசல்) மீதான அடிப்படை கலால் வரி மற்றும் சிறப்பு கூடுதல் கலால் வரி விகிதங்கள் குறைக்கப்பட்டுள்ளன. இதனால் நுகர்வோர் கூடுதல் சுமையை (செலவு) சுமக்க மாட்டார்கள். இவ்வாறு அவர் தெரிவித்தார். நிர்மலா சீதாராமனின் விளக்கத்தால் சாமானிய மக்கள் நிம்மதி அடைந்துள்ளனர்.