ஜப்பானில் பறக்கும் கார் சோதனை வெற்றி2023ல் விற்பனைக்கு அறிமுகம்?

 

ஜப்பானில் பறக்கும் கார் சோதனை வெற்றி2023ல் விற்பனைக்கு அறிமுகம்?

ஹாலிவுட் திரைப்படங்களில் வருவதை போல அடுத்த சில ஆண்டுகளில் பறக்கும் கார்களை கண்கூடாக காணும் நிலை ஏற்பட்டாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. ஜப்பானில் பறக்கும் காரின் சோதனை வெற்றிகரமாக நடத்தி முடிக்கப்பட்டுள்ளது..

ஜப்பானில் பறக்கும் கார் சோதனை வெற்றி2023ல் விற்பனைக்கு அறிமுகம்?

ஸ்கைடிரைவ் என்ற நிறுவனம் இந்த பறக்கும் காரை வடிவமைத்துள்ளது. ஜப்பானில் தயாரிக்கப்படும் இந்த கார், முதல்முறையாக பொதுமக்கள் முன்னிலையில் பறக்க வைத்து சோதனை நடத்தப்பட்டது. இது தொடர்பான வீடியோவையும் யூடியூப்பில் வெளியிட்டுள்ள அந்த நிறுவனம், இந்த சோதனை வெற்றிகரமாக அமைந்துள்ளதாக தெரிவித்துள்ளது. கிட்டத்தட்ட பெரிய சைஸ் டிரோன் போல இருக்கும் இதில் ஒருவர் அந்தரத்தில் காரில் பறப்பதை காண முடிகிறது. பொது மக்கள் கரகோஷங்களுக்கு இடையே காரின் சோதனை வெற்றிகரமாக அமைந்ததை அந்த வீடியோ மூலம் தெரிந்து கொள்ள முடிகிறது.

ஜப்பானில் பறக்கும் கார் சோதனை வெற்றி2023ல் விற்பனைக்கு அறிமுகம்?

அதிக போக்குவரத்து உள்ள நகரங்களில் எளிதில் சென்று வர உதவும் இத்தகைய பறக்கும் காருக்கு தேவை உள்ளதாக கூறும் ஸ்கைடிரைவ் நிறுவனம், 2023ம் ஆண்டுக்குள் வர்த்தக ரீதியில் ஜப்பானில் இதை அறிமுகப்படுத்தவும் திட்டமிட்டுள்ளது.

கடந்த ஆண்டில் வோலோகாப்டர் என்ற ஜெர்மானிய நிறுவனம், இருவர் பயணிக்கும் பறக்கும் டாக்சியை சிங்கப்பூரில் சோதனை நடத்தியது என்பது குறிப்பிடத்தக்கது.

எஸ். முத்துக்குமார்