தொடர் கனமழையால் வெள்ளபெருக்கு : தரைப்பாலம் நீரில் மூழ்கியது!

 

தொடர் கனமழையால் வெள்ளபெருக்கு : தரைப்பாலம் நீரில் மூழ்கியது!

விருதுநகர் மாவட்டத்தில் தொடர் மழை காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்புக்குள்ளாகியுள்ளது.

தமிழகத்தில் தொடர் கனமழையால் குளிர்ச்சியான வானிலை நிலவி வந்தாலும், சாலைகளில் வெள்ள நீர், வீடுகளில் புகுந்த மழை நீர் என மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். பல இடங்களில் மழையால் வீடுகள் இடிந்தும் , தரை பாலங்கள் உடைந்தும் காணப்படுகிறது.

தொடர் கனமழையால் வெள்ளபெருக்கு : தரைப்பாலம் நீரில் மூழ்கியது!

இந்நிலையில் விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே கனமழையால் தேவராயன்பட்டி ஓடையில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. ஓடையில் வெள்ளப்பெருக்கு காரணமாக நத்தம்பட்டி வடகரை உள்பட 12 கிராமங்களில் போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது. இதேபோல் ஸ்ரீவில்லிபுத்தூர் பகுதியில் கனமழையால் தரைப்பாலம் நீரில் மூழ்கியது. தொடர் கனமழை காரணமாக கூமாப்பட்டி – பிளவக்கல் அணை செல்லும் சாலையில் உள்ள தரைப்பாலம் நீரில் மூழ்கி போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

தொடர் கனமழையால் வெள்ளபெருக்கு : தரைப்பாலம் நீரில் மூழ்கியது!

இதேபோல் நெல்லையில் பெய்த கனமழையால் பாளையங்கோட்டை சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள வீடுகளில் வெள்ள நீர் புகுந்துள்ளது. எம்கேபி நகர், திருவள்ளுவர் நகர், ஆசாத் தெரு பகுதிகளில் 200க்கும் மேற்பட்ட வீடுகளில் மழைநீர் புகுந்து உள்ளதால் மக்கள் செய்வதறியாது திகைத்து வருகின்றனர்.