கோவை சித்திரைச் சாவடி தடுப்பணையில் வெள்ளப் பெருக்கு!

 

கோவை சித்திரைச் சாவடி தடுப்பணையில் வெள்ளப் பெருக்கு!

கோவை

மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதியில் பெய்து வரும் தொடர் மழையின் காரணமாக கோவை மாவட்டம் சித்திரைச் சாவடி தடுப்பணையில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு உள்ளது.

கேரளாவில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், தமிழகத்தில் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய கோவை, திருப்பூர், நீலகிரி உள்ளிட்ட மாவட்டங்களில் இடியுடன் கனமழை பெய்யும் என சென்னை வானிலை மையம் அறிவித்து இருந்தது.

கோவை சித்திரைச் சாவடி தடுப்பணையில் வெள்ளப் பெருக்கு!

இந்த நிலையில், கோவை மாவட்ட மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதி மற்றும் நொய்யல் ஆற்றின் நீர்பிடிப்பு பகுதிகளில் கடந்த சில நாட்களாக விட்டு விட்டு கனமழை பெய்து வருகிறது. இதனால், கோவை மாவட்டத்தின் சூழல் சுற்றுலா தலமான கோவை குற்றாலம் அருவில் வெள்ளபெருக்கு ஏற்பட்டு உள்ளது. இதனால், நொய்யலாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

இதனிடையே, தொண்டாமுத்தூரில் உள்ள சித்திரைச்சாவடி தடுப்பணைக்கு அதிகளவில் தண்ணீர் வந்து கொண்டு உள்ளதால் தடுப்பணையில் இருந்து நீர் அருவிபோல ஆர்ப்பரித்து கொட்டி வருகிறது. இதனை சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த பொதுமக்கள் ஆர்வமுடன் கண்டுகளித்து வருகின்றனர்.