குற்றாலம் நீர்வீழ்ச்சிகளில் வெள்ளப்பெருக்கு

 

குற்றாலம்  நீர்வீழ்ச்சிகளில் வெள்ளப்பெருக்கு

மேற்குத் தொடர்ச்சி மலை பகுதியில் கடந்த ஒரு வாரமாக பெய்து வரும் கனமழையால், கோவை குற்றாலம் உள்ளிட்ட நீர்வீழ்ச்சிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.

குற்றாலம்  நீர்வீழ்ச்சிகளில் வெள்ளப்பெருக்கு

கோவை குற்றாலம் மற்றும் தொண்டாமுத்துார் வட்டாரத்தில், ஒரு வாரத்துக்கும் மேலாக சாரல் மழை பெய்து வந்தது. இந்த நிலையில் கடந்த மூன்று நாட்களாக கோவை குற்றாலம், சிறுவாணி, பூண்டி உள்ளிட்ட வனப்பகுதிகளில் கனமழை பெய்யத் துவங்கியது. அதனால், கோவை குற்றாலம், சாடியாறு, கல்கொத்தி பதி, பூண்டி உள்ளிட்ட நீர்வீழ்ச்சிகளில் வெள்ளம் ஆர்ப்பரித்து கொட்டி வருகிறது.

குற்றாலம்  நீர்வீழ்ச்சிகளில் வெள்ளப்பெருக்கு

கொரோனா பரவல் காரணமாக நீர் வீழ்ச்சிகளுக்கு செல்ல தடை அமலில் உள்ள நிலையில் சுற்றுலாப் பயணிகளுக்கு தடை தொடர்ந்து வருகிறது. இந்த நிலையில் கோவை குற்றாலம் நீர்வீழ்ச்சிக்கு செல்லும் வழியில், பெரிய அளவில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது.

குற்றாலம்  நீர்வீழ்ச்சிகளில் வெள்ளப்பெருக்கு

மழைப்பொழிவு குறையும் பட்சத்தில் விரைவில் நிலச்சரிவு சீரமைக்கப்படும் என வனத்துறையினர் தெரிவித்துள்ளனர். சின்னாறு, பெரியாறுகளில் மழைநீர் அதிகரித்ததையடுத்து, நொய்யல் ஆற்றில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. கடந்த மாதத்தில் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் பெய்த கன மழையால் உக்குளம், கங்கநாராயண சமுத்திரம், சொட்டையாண்டி குளம் நிரம்பி வழிந்தது குறிப்பிடத்தக்கது.