ஆரணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு – தரைப்பாலம் அடித்துச்செல்லப்பட்டதால் போக்குவரத்து துண்டிப்பு

ஆரணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு – தரைப்பாலம்  அடித்துச்செல்லப்பட்டதால் போக்குவரத்து துண்டிப்பு

திருவள்ளூர்

ஆரணி ஆற்றில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கு காரணமாக ஊத்துக்கோட்டையில் தரைப்பாலம் நீரில் அடித்துச் செல்லப்பட்டதால் 30 கிராமங்களுக்கு போக்குவரத்து துண்டிக்கப்பட்டது. ஆந்திர மாநிலம் பிச்சாட்டூர் ஏரி நிரம்பியதால், ஏரியில் இருந்து வினாடிக்கு 3 ஆயிரம் கனஅடி உபரிநீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. இதனால், திருவள்ளூர் மாவட்டம் ஆரணி ஆற்றில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

ஆரணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு – தரைப்பாலம்  அடித்துச்செல்லப்பட்டதால் போக்குவரத்து துண்டிப்பு

இந்த நிலையில், ஊத்துக்கோட்டையில் ஆரணி ஆற்றின் மீது போடப்பட்டிருந்த தரைப்பாலத்தில் உடைப்பு ஏற்பட்டு, வெள்ள நீரில் அடித்துச்செல்லப்பட்டது. இதனால் 30 கிராமங்களுக்கான போக்குவரத்து முற்றிலுமாக துண்டிக்கப்பட்டுள்ளது. இதனால் ஊத்துக்கோட்டை நகரத்துக்கு வர வேண்டிய அப்பகுதி மக்கள் சுமார் 50 கிலோமீட்டர் சுற்றி, திருவள்ளூர் சென்று அங்கிருந்து ஊத்துக்கோட்டை வரவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

ஆரணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு – தரைப்பாலம்  அடித்துச்செல்லப்பட்டதால் போக்குவரத்து துண்டிப்பு

தொடர்ந்து ஆரணி ஆற்றில் நீர்வரத்து அதிகரித்து வருவதால், கரையோர மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு, மாவட்ட ஆட்சியர் பொன்னையா அறிவுறுத்தியுள்ளார். மேலும் தாழ்வான பகுதிகளில் மீட்புப்பணிகளை மேற்கொள்வதற்காக ஆங்காங்கே தீயணைப்பு, வருவாய் மற்றும் காவல்துறையினர் உஷார் படுத்தப்பட்டுள்ளனர்.