ஆம்பூரில் குடியிருப்புகளை சூழ்ந்த வெள்ளநீர்

 

ஆம்பூரில் குடியிருப்புகளை சூழ்ந்த வெள்ளநீர்

திருப்பத்தூர்

ஆம்பூர் சுற்றுவட்டார பகுதிகளில் பெய்த கனமழை காரணமாக, ஏரிகள் நிரம்பியதால் குடியிருப்பு பகுதிகளை வெள்ளநீர் சூழ்ந்தது.

ஆம்பூரில் குடியிருப்புகளை சூழ்ந்த வெள்ளநீர்

நிவர் புயல் காரணமாக திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி, ஆம்பூர், மாதனூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்தது. இதனால், தாழ்வான பகுதிகளில் மழைநீர் சூழ்ந்து கொண்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதேபோல், ஆம்பூர் சுற்றுவட்டார பகுதியில் பெய்த கனமழையால், சான்றோர் குப்பம் ஏரி நிரம்பி, குடியிருப்பு பகுதிகளை வெள்ளம் சூழ்ந்து கொண்டது. இதில் அங்குள்ள பள்ளியின் பக்கவாட்டு சுவர் மற்றும் 5-க்கும் மேற்பட்ட வீடுகளின் சுவர்கள் இடிந்து விழுந்தது. அதிர்ஷடவசமாக யாருக்கும் காயம் ஏற்படவில்லை.

ஆம்பூரில் குடியிருப்புகளை சூழ்ந்த வெள்ளநீர்

மேலும், ஆம்பூர் சாய்பாபா கோயில் அருகேயுள்ள ஆலங்குப்பம் ஏரியில் உடைப்பு ஏற்பட்டதால், குடியிருப்புகளை வெள்ளநீர் சூழ்ந்துகொண்டது. இதனிடையே, மாவட்ட நிர்வாகம் சார்பில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தாழ்வான பகுதிகளில் வசித்த 368 பேர், அரசு முகாம்களில் தங்க வைக்கப்பட்டனர்