மகாராஷ்டிராவில் 40 ஆண்டுகளில் இல்லாத பேரழிவு… பலி எண்ணிக்கை 149ஆக உயர்வு!

 

மகாராஷ்டிராவில் 40 ஆண்டுகளில் இல்லாத பேரழிவு… பலி எண்ணிக்கை 149ஆக உயர்வு!

தென்மேற்கு பருவமழை காரணமாக உத்தரகாண்ட், கோவா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக மகாராஷ்டிராவில் பெய்துவரும் கனமழை காரணமாக அம்மாநிலத்தின் பல்வேறு மாவட்டங்கள் வெள்ளத்தில் தத்தளிக்கின்றன. பெய்துவரும் தொடர் மழையால் ஆங்காங்கே நிலச்சரிவும் ஏற்பட்டு மக்களின் இயல்பு வாழ்க்கையைப் பாதித்துள்ளது. கடந்த 40 ஆண்டுகளில் இல்லாத அளவு மழை பெய்துள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மகாராஷ்டிராவில் 40 ஆண்டுகளில் இல்லாத பேரழிவு… பலி எண்ணிக்கை 149ஆக உயர்வு!

மகாராஷ்டிராவில் பெய்த கனமழையால் கடலோரப் பகுதியின் சில பகுதிகளில் நிலச்சரிவு, வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு பலரும் உயரிழந்துள்ளனர். பல பகுதிகள் வெள்ளத்தால் மூழ்கியுள்ளன. ராய்காட், ரத்னகிரி, கோலாப்பூர், சதாரா, சங்கிலி ஆகிய மாவட்டங்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன. மழைநீரில் மூழ்கிய குடியிருப்புகளில் சிக்கி தவிக்கும் மக்களை இரவு பகல் பாராது தேசிய பேரிடர் மீட்புக்குழுவினர் மீட்டு வருகின்றனர்.

மகாராஷ்டிராவில் 40 ஆண்டுகளில் இல்லாத பேரழிவு… பலி எண்ணிக்கை 149ஆக உயர்வு!

இந்நிலையில் மகாராஷ்டிராவில் கனமழைக்கு உயிரிழந்தோரின் எண்ணிக்கை 149ஆக அதிகரித்துள்ளது. இறந்தவர்களில் பெரும்பாலானோர் ராய்காட் மற்றும் சதாரா மாவட்டங்களைச் சேர்ந்தவர்களாவர். இதுவரை 64 பேர் காணமால் போயுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அவர்களை மீட்கும் பணியில் பேரிடர் மேலாண்மை குழு ஈடுபட்டு வருகிறது. பாதிக்கப்பட்ட பகுதிகளில் நிவாரண மற்றும் மீட்பு நடவடிக்கைகளுக்காக 34 குழுக்கள் களமிறங்கியுள்ளன. மழையால் கடுமைாக பாதிக்கப்பட்டுள்ள ராய்காட், ரத்னகிரி மாவட்டங்களுக்கு தலா ரூ.2 கோடியும் மற்ற மாவட்டங்களுக்கு ரூ.50 லட்சத்தையும் மாநில அரசு அறிவித்துள்ளது.