அஸ்ஸாமில் 2071 கிராமங்களில் வெள்ள பாதிப்பு! – 9 லட்சம் பேர் பாதிப்பு… அதிகரிக்கும் பலி எண்ணிக்கை

 

அஸ்ஸாமில் 2071 கிராமங்களில் வெள்ள பாதிப்பு! – 9 லட்சம் பேர் பாதிப்பு… அதிகரிக்கும் பலி எண்ணிக்கை

Flood Situation In Assam Worsens 9 Lakh People Affected
அஸ்ஸாமில் ஏற்பட்டுள்ள வெள்ளப் பெருக்கில் 2000க்கும் மேற்பட்ட கிராமங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டு 20 பேர் உயிரிழந்துள்ளனர், மண் சரிவு காரணமாக 23 பேர் உயிரிழந்ததாக அஞ்சப்படுகிறது.

அஸ்ஸாமில் 2071 கிராமங்களில் வெள்ள பாதிப்பு! – 9 லட்சம் பேர் பாதிப்பு… அதிகரிக்கும் பலி எண்ணிக்கை

அஸ்ஸாம் மாநிலத்தில் பிரம்மபுத்திரா நதியில் அபாய கட்டத்தில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனால் அந்த மாநிலத்தில் மிகப்பெரிய அளவில் வெள்ள பாதிப்ப ஏற்பட்டுள்ளது. 23 மாவட்டங்களில் 2071 கிராமங்களைச் சேர்ந்த 9.26 லட்சம் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த பெருவெள்ளம் காரணமாக இதுவரை 20 பேர் உயிரிழந்துள்ளனர். நிலச்சரிவு காரணமாக இதுவரை 22 பேர் உயிரிழந்துள்ளதாக கூறப்படுகிறது.

அஸ்ஸாமில் 2071 கிராமங்களில் வெள்ள பாதிப்பு! – 9 லட்சம் பேர் பாதிப்பு… அதிகரிக்கும் பலி எண்ணிக்கைவெள்ளப்பெருக்கு காரணமாக 27 ஆயிரம் பேர் 193 நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். 68 ஆயிரம் ஹெக்டேர் நிலத்தில் மேற்கொள்ளப்பட்டு வந்த விவசாயம் பாதிக்கப்பட்டுள்ளது. மாநில பேரிடர் மீட்புக் குழுவினருடன் தேசிய பேரிடம் மேலாண்மைக் குழுவும் இணைந்து மீட்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். கொரோனா பாதிப்புக்கு மத்தியில் மிகப்பெரிய வெள்ளம் அஸ்ஸாமின் இயல்பு வாழ்க்கை திருப்பிப்போட்டுள்ளது.

http://


அஸ்ஸாமில் ஏற்பட்டுள்ள பாதிப்பு குறித்து மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா மாநில முதல்வர் சர்பானந்தாவிடம் கேட்டறிந்தார். மாநிலத்துக்குத் தேவையான அனைத்து உதவிகளும் செய்யப்படும் என்றும், பிரதமர் மோடி அஸ்ஸாம் மக்களுக்கு துணையாக இருப்பார் என்றும் அமித்ஷா ட்விட்டரில் வெளியிட்ட பதிவில் கூறியுள்ளார்.