‘குற்றால அருவியில் சீறிப்பாயும் மழை நீர்’ – 28 ஆண்டுகள் இல்லாத அளவுக்கு கடும் வெள்ளப்பெருக்கு!

 

‘குற்றால அருவியில் சீறிப்பாயும் மழை நீர்’ – 28 ஆண்டுகள் இல்லாத அளவுக்கு கடும் வெள்ளப்பெருக்கு!

தொடர் கனமழையால் கடந்த 28 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு குற்றால அருவியில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து இருப்பதால் கடந்த 3 நாட்களாக தென்காசி மாவட்டம் குற்றாலத்தில் தொடர் கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக அருவியில் நீர் வரத்து அதிகரித்த நிலையில், மேற்கு தொடர்ச்சி தொடர்ச்சி பகுதியில் பெய்த கனமழையால் அருவிகளில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. நேற்றிரவு 8 மணிக்கு அருவியில் வெள்ளப்பெருக்கு அதிகரித்து, தடாகம் பாலத்தை தாண்டி வெள்ளம் கரைபுரண்டு ஓடியது.

‘குற்றால அருவியில் சீறிப்பாயும் மழை நீர்’ – 28 ஆண்டுகள் இல்லாத அளவுக்கு கடும் வெள்ளப்பெருக்கு!

கடந்த 28 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு, இந்த முறை வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அருவியில் இருந்து வெள்ள நீர் வெளியேறிக் கொண்டிருப்பதால் செங்கோட்டை செல்லும் போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது. இதனால் மக்கள் எச்சரிக்கையுடன் இருக்குமாறு அறிவுறுத்திய மாவட்ட ஆட்சியர், நேற்று இரவே குற்றால அருவிக்கு சென்று வெள்ளப்பெருக்கை பார்வையிட்டார். மேலும் உரிய பாதுகாப்பு நடவடிக்கை எடுக்குமாறு உத்தரவிட்ட ஆட்சியர், யாரையும் அருவியின் அருகே விட வேண்டாம் என அறிவுறுத்தியுள்ளார்.