“சென்னையில் வெள்ளப்பெருக்கு” – தமிழக அரசுக்கு மத்திய நீர்வளத்துறை கடிதம்!

“சென்னையில் வெள்ளப்பெருக்கு” – தமிழக அரசுக்கு மத்திய நீர்வளத்துறை கடிதம்!

செம்பரம்பாக்கம் ஏரி முழு கொள்ளவை எட்டவுள்ள பாதுகாப்பு கருதி உபரிநீர் திறக்கப்படவுள்ளது. இநண்பகல் 12மணிக்கு செம்பரம்பாக்கம் ஏரி திறக்கப்பட உள்ளதால் அடையாற்றின் கரையோர மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளது. செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து வினாடிக்கு 1000 கன அடி நீர் திறக்கப்பட உள்ளதால் அடையாற்றில் வெள்ளம் பெருக்கு ஏற்படும் என்று தெரிகிரது.

“சென்னையில் வெள்ளப்பெருக்கு” – தமிழக அரசுக்கு மத்திய நீர்வளத்துறை கடிதம்!

இந்நிலையில் மத்திய நீர்வளத்துறை தமிழக அரசுக்கு கடிதம் எழுதியுள்ளார். அதில், அடையாறு பகுதியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட வாய்ப்புள்ளது . அதிகாரிகள் அந்தந்த பகுதிகளில் உள்ள மக்களுக்கு அறிவுறுத்தல்களை வழங்க தமிழக அரசுக்கு அறிவுறுத்தியுள்ளது. அத்துடன் சென்னை விமான நிலையத்தின் ஓடு தளங்களை முறையாகக் கண்காணிக்க மத்திய நீர்வளத்துறை அறிவுரை அளித்துள்ளது.

“சென்னையில் வெள்ளப்பெருக்கு” – தமிழக அரசுக்கு மத்திய நீர்வளத்துறை கடிதம்!

செம்பரம்பாக்கம் ஏரி பகுதியில் 20 சென்டிமீட்டர் வரை மழை பெய்யக்கூடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில் நாளை காலை 6 மணிக்குள் 15 முதல் 20 சென்டிமீட்டர் வரை கன மழை பெய்யும். இதனால் தமிழக அரசுக்கும் மத்திய சட்டத்துறை அமைச்சகம் எழுதியுள்ள கடிதத்தில் மழையளவு பற்றி தகவல் தெரிவித்துள்ளது. செம்பரம்பாக்கம் ஏரிக்கு 7 ஆயிரம் கன அடி நீர் வரை வரத்து இருக்க வாய்ப்பு இருப்பதால் இவ்வாறு எச்சரிக்கை அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.