மதுராந்தகம் ஏரி திறப்பு: கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை!

 

மதுராந்தகம் ஏரி திறப்பு: கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை!

நிவர் புயல் கடலூர், விழுப்புரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் கடும் பாதிப்பை ஏற்படுத்தி விட்டது. புயல் குறித்து வானிலை ஆய்வு மையம் தொடர்ந்து தகவல்கள் அளித்துக் கொண்டே வந்த நிலையில், தொடர்ந்து 2 நாட்களுக்கு அதீத கனமழை கொட்டித் தீர்த்தது. விடாது பெய்த கனமழையால் கடலோர மாவட்டங்களில் இருக்கும் பல நீர்நிலைகள் நிரம்பின. தற்போது பல ஏரிகள் முழு கொள்ளளவை எட்டியிருப்பதால், உபரி நீர் திறக்கப்பட வேண்டிய கட்டாயம் நிலவுகிறது.

மதுராந்தகம் ஏரி திறப்பு: கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை!

இந்த நிலையில், மதுராந்தகம் ஏரியில் இருந்து உபரி நீர் திறக்கப்பட உள்ளதால் கரையோர மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கத்திலிச்சேரி, விழுதமங்கலம், வளர்பிறை, முள்ளி, முன்னுத்திக்குப்பம், நீலமங்கலம் உள்ளிட்ட கிராம மக்கள் பாதுகாப்பாக இருக்குமாறு அறிவிக்கப்ட்டுள்ளது.