காவிரி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை!

 

காவிரி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை!

கடந்த சில நாட்களாக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. நல்ல மழையால் நீர் நிலைகள் நிரம்பியுள்ள நிலையில், பவானி சாகர் அணையில் இருந்து பாசனத்துக்கு தண்ணீர் திறந்து விடப்படுகிறது. கோவை மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் கனமழையால் மேட்டுப்பாளையம் பவானி ஆற்றில் வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டது. அதனால், பில்லூர் அணை நிரம்பி உபரிநீர் வெளியேற்றப்பட்டு வருவதால் பவானி ஆற்றில் இரண்டாவது நாளாக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

காவிரி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை!

இதனிடையே கர்நாடக அணைகளில் இருந்து காவிரியில் 44,000 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. இதன் காரணமாக தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல் காவிரி கரையோர மக்களுக்கு மாவட்ட நிர்வாகம் சார்பில் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஆலம்பாடி, ஊட்டமலை பகுதிகளில் தாழ்வாக வசிக்கும் மக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.