ஆந்திராவின் அம்மப்பள்ளி அணையில் 900 கன அடி நீர் திறக்கப்பட இருப்பதால் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை!

ஆந்திராவின் அம்மப்பள்ளி அணையில் 900 கன அடி நீர் திறக்கப்பட இருப்பதால் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை!

ஆந்திராவின் அம்மப்பள்ளி அணையில் 900 கன அடி நீர் திறக்கப்பட இருப்பதால் திருவள்ளூர் கொசஸ்தலை ஆற்றின் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

கடந்த சில வாரங்களாக பெய்து வரும் தொடர் மழையால், தமிழகத்தில் உள்ள பல்வேறு அணைகளின் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. இதனிடையே நிவர் புயலும் உருவாகியுள்ளது. இதனால் மேலும் சில அணைகளின் நீர்மட்டம் அதன் முழு கொள்ளளவை எட்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆந்திராவின் அம்மப்பள்ளி அணையில் 900 கன அடி நீர் திறக்கப்பட இருப்பதால் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை!

இந்நிலையில் ஆந்திர மாநிலம் அம்மப்பள்ளி அணையில் இருந்து கொசஸ்தலை ஆற்றில் விநாடிக்கு 900 கன அடி தண்ணீர் திறக்கபட இருப்பதால் திருத்தணி, பள்ளிப்பட்டு, திருவள்ளூர் மக்களுக்கு ஆட்சியர் பொன்னையா வெள்ள அபாய எச்சரிக்கை விட்டுள்ளார். நகரி முதல் பூண்டி ஏரி வரை தண்ணீர் வரும் என்பதால் ஆற்றில் இறங்கவோ, ஆற்றை கடக்கவோ,செல்பி எடுக்கவோ கூடாது என அறிவுறுத்தப்பட்டுள்ளது.