வேலூரில் வெள்ள எச்சரிக்கை! 800 குடும்பங்கள் வெளியேற்றம்

 

வேலூரில் வெள்ள எச்சரிக்கை! 800 குடும்பங்கள் வெளியேற்றம்

நிவர் புயல் நேற்று நள்ளிரவு முதல் இன்று அதிகாலை வரை புதுச்சேரிக்கு அருகே கரையைக் கடந்தது. புயல் கரையைக் கடந்தபோது, தமிழகம், புதுச்சேரி கடலோரப் பகுதிகளில் மணிக்கு 110 கி.மீ. முதல் 130 கி.மீ. வேகத்தில் காற்று வீசியது. மேலும் கனமழையும் பெய்தது. சென்னையில் நேற்று இரவு பலத்த காற்று வீசியதால் பல்வேறு பகுதிகளில் மரங்கள் சாய்ந்தன. மின்சாரமும் துண்டிக்கப்பட்டது. பல்வேறு பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்துள்ளதால் அப்பகுதிகளில் வசித்த மக்கள் பாதுகாப்பாக நிவாரண முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

வேலூரில் வெள்ள எச்சரிக்கை! 800 குடும்பங்கள் வெளியேற்றம்

இந்நிலையில் தொடர் மழை காரணமாக வேலூர் மாவட்டத்தின் மிகப்பெரிய அணையான மோர்தானா அணையில் இருந்து சுமார் 11 ஆயிரம் கனஅடி அளவுக்கு தண்ணீர் வெளியேறி வருவதால் குடியாத்தம் நகருக்குள் பாயும் கௌண்டன்ய மகாநதி ஆற்றில் அபாயகரமான வெள்ள பெருக்கு ஏற்பட்டுள்ளது. பொது மக்களை பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கும் பணியில் வருவாய் துறையினர் ஈடுபட்டுள்ளனர்.

இதுவரை கெளவுண்டன்யா ஆற்றின் கறையோரம் உள்ள மக்கள் 800 பேர் மீட்கப்பட்டு 4 முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். தற்போது வரை வினாடிக்கு 11 ஆயிரம் கனஅடி நீர் வந்துகொண்டிருக்கிறது. இது மேலும் அதிகரிக்க கூடும் என தகவல் வெளியாகியுள்ளது. குடியாத்தம் வட்டாட்சியர் தலைமையில் மீட்பு பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.