காஞ்சிபுரம் மாவட்ட பாலாற்றங்கரை மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

 

காஞ்சிபுரம் மாவட்ட பாலாற்றங்கரை மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

நிவர் புயலை தொடர்ந்து தெற்கு வங்கக்கடலில் உருவான புரெவி புயல், அந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமானது, ராமநாதபுரத்தின் தென்மேற்கு திசையில் 40 கி.மீ தொலைவில் நகராமல் அதே இடத்தில் நிற்பதால் தென்மாவட்டங்களில் மழை வெளுத்து வாங்குகிறது. அதுமட்டுமில்லாமல் சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர் உள்ளிட்ட மாவட்டங்களில் பெய்துவரும் மழையால் பல ஏரிகள் நிரம்பி இருப்பதால், உபரி நீர் திறக்கப்பட்டு வருகிறது.

காஞ்சிபுரம் மாவட்ட பாலாற்றங்கரை மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை
Torrential rain causing flood.

அந்தவகையில் பொன்னை அணையிலிருந்து விநாடிக்கு 12,000 கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளதால் காஞ்சிபுரம் மாவட்ட பாலாறு நதிக்கரை கிராம மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்படுகிறது. தாழ்வான இடங்களில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பாக இருக்குமாறு காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் மகேஸ்வரி அறிவுறுத்தியுள்ளார்.

இதேபோல் ஆந்திரா மாநிலத்தில் பெய்து வரும் கனமழையின் காரணமாக பாலாறு பகுதியில் சித்தூர் மாவட்டத்தில் கலவ குண்டா அணையிலிருந்து 12 ஆயிரம் கன அடிக்கு மேல் நீர்த் இருப்பதாக தகவல் வந்தது தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் கிளாடிஸ்டன் புஷ்பராஜ் பாலாற்று கரையோரம் வசிக்கும் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்துள்ளார், மேலும் ஆற்றங்கரையோரம் இருக்கக்கூடிய மக்கள் அனைவரும் பாதுகாப்பான இடங்களில் செல்ல வேண்டுமெனவும் பொதுமக்கள் தேவை இல்லாமல் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்படும் போது செல்பி எடுப்பது, ஆற்றில் குளிப்பது போன்று எந்தவிதமான செயலிலும் ஈடுபட வேண்டாம் எனவும் மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தியுள்ளார்.