பிளிப்கார்ட் ”பிக் பில்லியன் டேஸ்” 16ம் தேதி தொடக்கம்!’

 

பிளிப்கார்ட் ”பிக் பில்லியன் டேஸ்” 16ம் தேதி தொடக்கம்!’

பிளிப்கார்ட் ஆன்லைன் ஸ்டோரின் ”பிக் பில்லியன் டேஸ் விற்பனை வரும் 16ஆம் தேதி தொடங்குகிறது. வரும் 16ம் தேதி தொடங்கி 21ம் தேதி வரை பிக் பில்லியன் டேஸ் விற்பனை நடைபெற உள்ளதாக பிளிப்கார்ட் தெரிவித்துள்ளது.

முன்னணி ஆன்லைன் விற்பனை நிறுவனமான பிளிப்கார்ட் அவ்வப்போது, சிறப்பு தள்ளுபடி விற்பனை திருவிழாக்களை நடத்துவதை வழக்கமாக கொண்டிருக்கிறது. அந்த வகையில் பண்டிகை காலத்தை முன்னிட்டு அதன் பிரபல ”பிக் பில்லியன் டேஸ்” விற்பனை, வரும் 16ம் தேதி தொடங்கி 21ம் தேதி வரை நடக்கும் என பிளிப்கார்ட் தெரிவித்துள்ளது.

பிளிப்கார்ட் ”பிக் பில்லியன் டேஸ்” 16ம் தேதி தொடக்கம்!’

இதில், பிளிப்கார்ட் பிளஸ் எனப்படும் சிறப்பு வாடிக்கையாளர்களுக்கு தள்ளுபடி விற்பனை முன்கூட்டியே அதாவது வரும் 15ம் தேதி இரவு 8 மணிக்கே தொடங்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் எஸ்பிஐ டெபிட் மற்றும் கிரெடிட் கார்டு வைத்திருக்கும் வாடிக்கையாளர்களுக்கு 10 சதவீத கூடுதல் தள்ளுபடி வழங்கப்படும் என பிளிப்கார்ட் தெரிவித்துள்ளது.

மேலும் பஜாஜ் பின்செர்வ், எச்டிஎப்சி, ஐசிஐசிஐ மற்றும் எஸ்பிஐ வங்கி வாடிக்கையாளர்களுக்கு முன்தொகை இல்லாத மாதாந்திர தவணை திட்டம் வழங்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிளிப்கார்ட் ”பிக் பில்லியன் டேஸ்” 16ம் தேதி தொடக்கம்!’

ஸ்மார்ட்போன், வீட்டு உபயோகப்பொருட்கள் , மின்னணு சாதனங்கள் மற்றும் மடிக்கணிணி உள்ளிட்ட பல பொருட்களுக்கு மெகா தள்ளுபடி வழங்கப்பட உள்ளதாக பிளிப்கார்ட் தெரிவித்துள்ளது. இதனிடையே இதற்கு போட்டியாக அமேசான் நிறுவனமும், ” தி கிரேட் இந்தியன் ஃபெஸ்டிவல் விற்பனையை விரைவில் தொடங்க உள்ளது என்பத குறிப்பிடத்தக்கது.

-எஸ். முத்துக்குமார்