அதானி குழுமத்துடன் இணைந்த ஃபிளிப்கார்ட்!

 

அதானி குழுமத்துடன் இணைந்த ஃபிளிப்கார்ட்!

சர்வதேச அளவில் இ-காமர்ஸ் எனும் ஆன்லைன் வர்த்தகத்தில் அசைக்க முடியாத சக்தியாக வலம் வருகிறது அமேசான். இந்தியாவிலும் கோலோச்சுகிறது. ஆனால் அந்நிறுவனத்தோடு சரி சம பலத்துடன் இந்திய நிறுவனமான ஃபிளிப்கார்ட் மோதிக் கொண்டிருக்கிறது. அமேசானை வீழ்த்த மற்றொரு அமெரிக்க நிறுவனமான வால்மார்ட்டுடன் கைகோத்துள்ளது. ஃபிளிப்கார்ட்டின் பெருவாரியான பங்குகள் வால்மார்ட் நிறுவனத்திடம் இருக்கிறது.

அதானி குழுமத்துடன் இணைந்த ஃபிளிப்கார்ட்!

அதேபோல வால்மார்ட் இந்தியாவின் 100 சதவீத பங்குகள் ஃபிளிப்கார்ட் வசம் இருக்கிறது. ஆரம்பத்தில் நன்றாகச் சென்றுகொண்டிருந்த ஆன்லைன் வர்த்தகம் கொரோனா பரவல் காரணமாகத் தடைப்பட்டது. அமேசானும் அடி வாங்கியது. இதனால் செய்வதறியாது ஆன்லைன் வர்த்தக நிறுவனங்கள் திகைத்தன. அதற்குப் பின் ஊரடங்கு கொஞ்சம் கொஞ்சமாக விலக்கிக் கொள்ளப்பட்டதால் மீண்டும் ஆன்லைன் டெலிவரி சேவை தொடங்கியது.

அதானி குழுமத்துடன் இணைந்த ஃபிளிப்கார்ட்!

தற்போது மீண்டும் இ-காமர்ஸ் வர்த்தகம் சூடுபிடிக்க தொடங்கியிருக்கிறது. கொரோனாவால் படுத்திருந்த பொருளாதாரம் மீண்டும் மேலெழும்பி வருகிறது. இதனால் மக்களிடமும் பணப்புழக்கம் அதிகரித்திருக்கிறது. இதனால் அவர்களின் நுகரும் சக்தியும் குறிப்பிட்ட அளவு உயர்ந்திருக்கிறது. இதைக் கருத்தில் கொண்டு தனது சேவையை விரைவாகவும் துல்லியமாகவும் மக்களிடம் கொண்டுசேர்க்க அதானி குழுமத்துடன் ஃபிளிப்கார்ட் கைகோத்துள்ளது.

அதானி குழுமத்துடன் இணைந்த ஃபிளிப்கார்ட்!

இந்த ஒப்பந்தத்தின்படி ஃபிளிப்கார்ட் நிறுவனம் மூன்றாவது தரவுகள் மையத்தை சென்னையிலுள்ள அதானி நிறுவனத்தில் நிறுவ இருக்கிறது. அதேபோல 5 லட்சத்து 34 ஆயிரம் சதுரஅடியில் மும்பையில் அதானி நிறுவனம் தளவாட மையத்தை கட்டமைக்கவுள்ளது. இது ஃபிளிப்கார்டுக்கு குத்தகைக்கு விடப்படும். இதனால் சிறு, குறு வணிகர்கள் எளிதாக சந்தையை அணுகவும், மக்களுக்கு விரைவாகப் பொருட்களைக் கொண்டுசேர்க்கவும் முடியும் என்று தீர்மானிக்கப்பட்டுள்ளது. இந்தப் புதிய ஒப்பந்ததால் நேரடியாக 2,500 பேருக்கும் மறைமுகமாக ஆயிரம் பேருக்கும் வேலைவாய்ப்பு உருவாகும் என்று அவதானிக்கப்பட்டுள்ளது.