ஃபிளிப்கார்ட் தளம் இனி தமிழ், தெலுங்கு, கன்னட மொழிகளிலும் இயங்கும்

 

ஃபிளிப்கார்ட் தளம் இனி தமிழ், தெலுங்கு, கன்னட மொழிகளிலும் இயங்கும்

டெல்லி: ஃபிளிப்கார்ட் தளம் இனி தமிழ், தெலுங்கு, கன்னட மொழிகளிலும் இயங்கும் வகையில் அப்டேட் செய்யப்பட்டுள்ளது.

ஃபிளிப்கார்ட் தளத்தின் ஷாப்பிங் அனுபவத்தை மேம்படுத்த புதிய வசதி சேர்க்கப்பட்டுள்ளது. அதாவது இனி ஃபிளிப்கார்ட் தளத்தை தமிழ், தெலுங்கு, கன்னட மொழிகளிலும் பயன்படுத்தலாம். முன்னதாக 9 மாதங்களுக்கு முன்பு  ஹிந்தி மொழியில் இந்த தளத்தை பயன்படுத்தும் வகையில் அப்டேட் வழங்கப்பட்டது. ஆங்கிலம் மற்றும் ஹிந்தி மொழிகள் அறியாத பயனர்களும் ஃபிளிப்கார்ட் தளத்தை இனி எளிதாக பயன்படுத்துவதற்காக தமிழ், தெலுங்கு, கன்னட மொழிகளில் இயங்கக் கூடிய அப்டேட் வழங்கப்பட்டுள்ளது.

கன்னடம், தமிழ் மற்றும் தெலுங்கில் ஃபிளிப்கார்ட் தளத்தை மாற்றுவதற்கு சுமார் 54 லட்சத்திற்கும் அதிகமான சொற்களை அந்நிறுவனம் தங்கள் தளத்தில் உட்புகுத்தி உள்ளது. ஃபிளிப்கார்ட் தளத்தின் இந்த மொழிபெயர்ப்பால் நாட்டின் சிறிய நகரங்களில் உள்ள மக்களும் இ-காமர்ஸ் இணையதளத்தில் எளிதாக ஷாப்பிங் செய்ய உதவியாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.