” ஃபேஷன் ரீடெய்ல் நிறுவனத்தில் பிளிப்கார்ட் ரூ. 1500 கோடி முதலீடு”

” ஃபேஷன் ரீடெய்ல் நிறுவனத்தில் பிளிப்கார்ட் ரூ. 1500 கோடி முதலீடு”

ஆதித்யா பிர்லா குழுமத்திற்கு சொந்தமான ஃபேஷன் ரீடெயல் நிறுவனத்தில் பிளிப்கார்ட் நிறுவனம் ஆயிரத்து 500 கோடி முதலீடு செய்ய உள்ளது தெரியவந்துள்ளது.

” ஃபேஷன் ரீடெய்ல் நிறுவனத்தில் பிளிப்கார்ட் ரூ. 1500 கோடி முதலீடு”

இதன்படி, ஆதித்யா பிர்லா குழுமத்தின் ஃபேஷன் ரீடெய்ல் நிறுவனத்தில் 7.8 சதவீத பங்குகளை பிளிப்கார்ட் பெறும் என்றும் இதற்காக ஏறத்தாழ ஆயிரத்து 500 கோடி ரூபாயை அந்நிறுவனத்தில் பிளிப்கார்ட் முதலீடு செய்யும் என தெரிகிறது. இந்த தகவலை ஆதித்யா பிர்லா குழும நிறுவனம் உறுதிப்படுத்தி உள்ளது.

” ஃபேஷன் ரீடெய்ல் நிறுவனத்தில் பிளிப்கார்ட் ரூ. 1500 கோடி முதலீடு”

இது குறித்து அக்குழுமத்தின் தலைவர் மங்களம் பிர்லா கூறுகையில், இந்தியாவின் வளர்ச்சி திறனை வெளிப்படுத்தும் விதமான ஒப்பந்தம் இது என்றும், அடுத்த 5 ஆண்டுகளில் 10 ஆயிரம் கோடி டாலர் என்ற வளர்ச்சியை அடைய உள்ள இந்திய ஜவுளி துறையின் மீது எங்கள் குழுமத்திற்கு உள்ள பலமான நம்பிக்கையின் வெளிப்பாடு என்று அவர் தெரிவித்தார்.

” ஃபேஷன் ரீடெய்ல் நிறுவனத்தில் பிளிப்கார்ட் ரூ. 1500 கோடி முதலீடு”

டிஜிட்டல் மாற்றம் தொடர்பான திட்டத்தின் மூலமாக வாடிக்கையாளர்களை மேலும் சென்றடைவதற்கான முயற்சிகளை குழுமம் மேலும் செயல்படுத்தும் என்றும் அக்குழுமத்தின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே தரம் மற்றும் கொடுக்கும் பணத்திற்கு மதிப்பை எதிர்பார்க்கும் இந்திய நுகர்வோர்களின் தேவைகளை எதிர்கொள்ள தேவையான வகையில் புதுப்புது நிறுவனங்களுடன் கூட்டு சேர்வதில் பிளிப்கார்ட் தொடர்ந்து கவனம் செலுத்தி வருவதாக அக்குழுமத்தின் முதன்மை செயல் அதிகாரி கல்யாண் கிருஷ்ணமூர்த்தி தெரிவித்தார்.

  • எஸ். முத்துக்குமார்