வியாபாரம் சூப்பர்…. ஆனால் ஒரு வருஷத்துல ரூ.3,150 கோடி நஷ்டம்.. பிளிப்கார்ட் இந்தியா நிறுவனத்தின் வேதனை

வியாபாரம் சூப்பர்…. ஆனால் ஒரு வருஷத்துல ரூ.3,150 கோடி நஷ்டம்.. பிளிப்கார்ட் இந்தியா நிறுவனத்தின் வேதனை

பிளிப்கார்ட் இந்தியா நிறுவனத்துக்கு கடந்த மார்ச் மாதத்துடன் நிறைவடைந்த நிதியாண்டில் ரூ.3,150.6 கோடி நஷ்டம் ஏற்பட்டுள்ளது.

வால்மார்ட் நிறுவனத்துக்கு சொந்தமான பிளிப்கார்ட் இந்தியா நிறுவனம் தனது 2019-20ம் நிதியாண்டு கணக்கு தொடர்பாக கார்ப்பரேட் விவகாரங்கள் துறை அமைச்சகத்தில் தாக்கல் செய்த ஆவணங்களில், பிளிப்கார்ட் இந்தியா நிறுவனம் கடந்த மார்ச் மாதத்துடன் நிறைவடைந்த நிதியாண்டில் ரூ.3,150.6 கோடி நஷ்டம் அடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

வியாபாரம் சூப்பர்…. ஆனால் ஒரு வருஷத்துல ரூ.3,150 கோடி நஷ்டம்.. பிளிப்கார்ட் இந்தியா நிறுவனத்தின் வேதனை
வால்மார்ட்

2018-19ம் நிதியாண்டில் பிளிப்கார்ட் இந்தியா நிறுவனத்துக்கு ரூ.3,836.8 கோடி நஷ்டம் ஏற்பட்டு இருந்தது. ஆக கடந்த நிதியாண்டில் பிளிப்கார்ட் இந்தியா நிறுவனத்தின் நஷ்டம் சிறிது குறைந்துள்ளது குறிப்பிடத்தக்கது. கடந்த நிதியாண்டில் வருவாய் அதிகரித்துள்ளபோதிலும் அந்நிறுவனம் நஷ்டம் அடைந்துள்ளது.

வியாபாரம் சூப்பர்…. ஆனால் ஒரு வருஷத்துல ரூ.3,150 கோடி நஷ்டம்.. பிளிப்கார்ட் இந்தியா நிறுவனத்தின் வேதனை
பிளிப்கார்ட்

2020 மார்ச் 31ம் தேதியுடன் முடிவடைந்த கடந்த நிதியாண்டில் பிளிப்கார்ட் நிறுவனத்தின் நிகர மொத்த வருவாய் ரூ.34,610.10 கோடியாக உயர்ந்துள்ளது. 2019 மார்ச் 31ம் தேதியுடன் முடிவடைந்த முந்தைய நிதியாண்டில் பிளிப்கார்ட் நிறுவனத்தின் நிகர மொத்த வருவாய் ரூ.30,934.90 கோடியாக இருந்தது. ஆக கடந்த நிதியாண்டில் பிளிப்கார்ட் நிறுவனத்தின் நிகர மொத்த வருவாய் 11.88 சதவீதம் அதிகரித்துள்ளது.