ஸ்மார்ட்போன் வாங்குபவர்களுக்கு ஜாக்பாட் – மீண்டும் வருகிறது ஃபிளிப்கார்ட்டின் Big Saving Days Sale!

 

ஸ்மார்ட்போன் வாங்குபவர்களுக்கு ஜாக்பாட் – மீண்டும் வருகிறது ஃபிளிப்கார்ட்டின் Big Saving Days Sale!

இந்தியாவின் பிரபல இ-காமர்ஸ் நிறுவனம் ஃபிளிப்கார்ட். அமேசானுக்கும் ஃபிளிப்கார்ட்டுக்கும் தான் கடும் போட்டி. இதனால் விழாக்காலங்களுக்கு முன்பே இந்த இரு நிறுவனங்களின் தளங்களும் விழாக்கோலம் பூண்டுவிடும். அந்த அளவிற்கு வாடிக்கையாளர்களைக் கவரும் விதமாக அதிரடியான சலுகைகள், தள்ளுபடிகளை வாரி வழங்குவார்கள். கடந்த ஒரு வருடத்திற்கும் மேலாக கொரோனா ஊரடங்கு காலம் இருந்ததால் பெரியளவில் லாபம் ஈட்ட முடியாமல் இதுபோன்ற இ-காமர்ஸ் நிறுவனங்கள் தவித்து வந்தன.

ஸ்மார்ட்போன் வாங்குபவர்களுக்கு ஜாக்பாட் – மீண்டும் வருகிறது ஃபிளிப்கார்ட்டின் Big Saving Days Sale!

சில மாதங்களுக்கு முன் நிலைமை சீரான பின்னரே மீண்டெழ ஆரம்பித்தன. கடந்த மே மாதம் 2ஆம் தேதி முதல் 7ஆம் தேதி வரை ஃபிளிப்கார்ட் நிறுவனம் Big Saving Days என்ற பெயரில் சலுகைகளை அறிவித்திருக்கிறது. அந்த நாட்களில் ஸ்மார்போன்கள் உள்ளிட்ட எலக்ட்ரானிக்ஸ் பொருட்களுக்கு அதிகப்படியான சலுகைகள் அளிக்கப்படும் என ஃபிளிப்கார்ட் தெரிவித்திருந்தது. சாம்சங் ஸ்மார்ட்போன்களுக்கு நினைத்ததை விட அதிக சதவீத தள்ளுபடி வழங்கப்பட்டது. இந்தச் சலுகைகளைப் பயன்படுத்தி மக்கள் எலக்ட்ரானிக் சாதங்களை வாங்கி குவித்தனர்.

ஸ்மார்ட்போன் வாங்குபவர்களுக்கு ஜாக்பாட் – மீண்டும் வருகிறது ஃபிளிப்கார்ட்டின் Big Saving Days Sale!

இதற்கு நல்ல வரவேற்பு கிடைத்ததால் மீண்டும் Big Saving Days சலுகைகளை அறிவித்திருக்கிறது ஃபிளிப்கார்ட். ஜூன் 13 முதல் ஜூன் 16 வரை இந்தச் சலுகைகளை வாடிக்கையாளர்கள் பயன்படுத்திக் கொள்ளலாம். எலக்ட்ரானிக்ஸ் பொருட்களுக்கு 80% வரையிலும் ஸ்மார்ட் டிவிக்களுக்கு 75% வரையிலும் தள்ளுபடி அளிக்கப்படவுள்ளது. Google Pixel 4a, iPhone 11 Pro, Motorola Razr 5G, Samsung Galaxy F12, and Asus ROG Phone 3 உள்ளிட்ட ஸ்மார்ட்போன்களுக்கு வெயிட்டான சலுகைகள் கொடுக்கப்பட்டுள்ளன.

ஸ்மார்ட்போன் வாங்குபவர்களுக்கு ஜாக்பாட் – மீண்டும் வருகிறது ஃபிளிப்கார்ட்டின் Big Saving Days Sale!

Samsung Galaxy F12 ஸ்மார்ட்போனின் விலை ரூ.10,999, தள்ளுபடியுடன் தற்போது ரூ.9,999 என்ற விலையில் கிடைக்கிறது. Google Pixel 4a என்ற போனின் ரூ.36,100. ஃபிளிப்கார்ட்டில் அதன் விலை ரூ.26,999. The Flipkart sale will have the iPhone 11 Pro₹ 79,899 at Rs. 74,999, down from Rs. 79,999. iPhone XR விலை – ரூ.41,999. தற்போதைய விலை- ரூ.39,999. iPhone 11 Pro விலை ரூ.79,899. தள்ளுபடியுடன் ரூ. 74,999 என விலை குறைக்கப்பட்டிருக்கிறது. இதுதவிர ‘Crazy Deals’ என்ற பெயரில் நள்ளிரவு 12 மணி, காலை 8 மணி, மாலை 4 மணி ஆகிய நேரங்களில் நாம் நினைத்துப் பார்க்காத சலுகைகளைக் கொடுக்கவும் திட்டமிட்டுள்ளது.