பண்டிகைக் காலத்தில் அதிக வாடிக்கையாளர்களை ஈர்த்த ஃபிளிப்கார்ட்!

 

பண்டிகைக் காலத்தில் அதிக வாடிக்கையாளர்களை ஈர்த்த ஃபிளிப்கார்ட்!

ஆன்லைன் வர்த்தகத்தில் முன்னணி நிறுவனமான பிளிப்கார்ட் இந்த பண்டிகை காலத்தில் அதிக வாடிக்கையாளர்களை ஈர்த்து சாதனை செய்துள்ளது. கடந்த ஆண்டைவிட , இந்த ஆண்டு 1.5 சதவீதம் விற்பனை உயர்வை கண்டுள்ளது.

பண்டிகைக் காலத்தில் அதிக வாடிக்கையாளர்களை ஈர்த்த ஃபிளிப்கார்ட்!

அக்டோபர் மாதத்துடன் முடிவடைந்த பிளிகாட்டின் தாய் நிறுவனமான வால்மார்ட் 2 லட்சத்து 20 ஆயிரம் கோடி ரூபாய் வரை வர்த்தகம் செய்துள்ளது. அதில் குறிப்பிடத்தக்க விற்பனை பிளிப்கார்ட் மற்றும் போன் பி செயலி மூலம் கிடைத்துள்ளதாக தெரிய வந்துள்ளது.
போன் பி மற்றும் பிளிப்கார்ட் நிறுவனங்களில் இதுவரை இல்லாத வகையில், தொடர்ச்சியாக பொருட்களை வாங்கும் வாடிக்கையாளர்கள் அதிகரித்துள்ளனர். பிளிப்கார்ட்டின் பெருவாரியான பங்குகளை 2018 ஆம் ஆண்டில் சுமார் 1 லட்சத்து 18 ஆயிரம் கோடி ரூபாய்க்கு வால்மார்ட் வாங்கியது. இந்த ஆண்டில் மீண்டும் சுமார் 12 ஆயிரம் கோடி ரூபாய் முதலீடு செய்துள்ளது குறிப்பிடத்தக்து. இது தொடர்பான தகவலை வால்மார்ட் நிறுவனம் வெளியிட்டுள்ளது.

பண்டிகைக் காலத்தில் அதிக வாடிக்கையாளர்களை ஈர்த்த ஃபிளிப்கார்ட்!


பிளிப்கார்ட் நிறுவனம் கடந்த அக்டோபர் மாதம், 16 ஆம் தேதி முதல், 21 ஆம் தேதி வரை ’பிக் பில்லியன் டே’ என பண்டிகை கால விற்பனையை செய்தது. அப்போது கடைகளுக்கு சென்று பொருட்களை வாங்க தயக்கம் காட்டிய மக்கள், ஆன்லைன் விற்பனையில் அதிக பொருட்களை வாங்கினர். தவிர ஊரடங்கு காரணமாக பிளிப்கார்ட் தளத்தில் பொருட்களை வாங்கும் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது. பிளிப்கார்ட் நிறுவனம், சுமார் 1,500 கோடி ரூபாய் அளவுக்கு ஆதித்யா பிர்லா பேஷன் நிறுவனத்திலும், ரூ.260 கோடியை அர்விந்த் யூத் பிராண்டிலும் முதலீடு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.