சென்னை விமான நிலையத்தில் 61 நாட்களுக்கு பிறகு விமான சேவைகள் தொடங்கியது

 

சென்னை விமான நிலையத்தில் 61 நாட்களுக்கு பிறகு விமான சேவைகள் தொடங்கியது

சென்னை: சென்னை விமான நிலையத்தில் 61 நாட்களுக்கு பிறகு விமான சேவைகள் தொடங்கியது.

கொரோனா வைரஸ் பரவலை தடுக்க மார்ச் மாத இறுதியில் இருந்து நான்கு கட்டங்களாக நாட்டில் ஊரடங்கு பின்பற்றப்பட்டு வருகிறது. சிறப்பு விமானங்கள், சரக்கு விமானங்கள் தவிர மற்ற உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு விமான சேவைகள் முற்றிலுமாக தடை செய்யப்பட்டன.

இந்த நிலையில், மத்திய மற்றும் மாநில அரசுகள் அனுமதி அளித்ததை தொடர்ந்து இன்று முதல் நாட்டில் உள்நாட்டு விமான சேவைகள் தொடங்கியது. அதன்படி சென்னை, டெல்லி, திருவனந்தபுரம், பெங்களூர் ஆகிய விமான நிலையங்களில் இருந்து விமான சேவை தொடங்கியது. விமான பயணச் சீட்டுகள் அனைத்தையும் மக்கள் ஆன்லைன் மூலமாகவே முன்பதிவு செய்து பெற முடியும்.

சென்னை விமான நிலையத்தில் 61 நாட்களுக்கு பிறகு விமான சேவைகள் தொடங்கியது

விமான விமான நிலையங்களில் பயணிகள் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் குறித்து ஏற்கனவே மத்திய அரசு அறிவித்து விட்டது. அதன்படி பயணிகள் இன்று விமான நிலையங்களில் சமூக இடைவெளியை கடைபிடித்தனர். சென்னை விமான நிலையத்தில் இன்று 12 விமான சேவைகள் தொடங்கின.

உள்நாட்டு விமான பயணம் குறித்து தமிழக அரசு ஏற்கனவே வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது. அதன்படி மற்ற மாநிலங்களில் இருந்து தமிழகத்திற்கு வரும் பயணிகள் தங்களின் விவரங்களை தமிழ்நாடு இ-பாஸ் இணையதளத்தில் பதிவு செய்வது கட்டாயம் ஆகும்.

தமிழகம் வர விரும்பும் பயணிகளுக்கு காய்ச்சல், இருமல், சளி இருக்கிறதா? அவர்கள் தடைசெய்யப்பட்ட பகுதிகளில் இருந்து வருகிறார்களா? கடைசி இரண்டு மாதங்களில் அவர்கள் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளாதவர்களா? போன்ற பல விவரங்களை அந்த இணையதளத்தில் பயணிகள் பதிவு செய்ய வேண்டும். அதேசமயம் இந்த இ-பாஸ் இணையதளத்தில் தவறான தகவல்களை அளித்து தமிழகம் வர முயற்சி செய்யும் நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.