சென்னை உள்பட 6 நகரங்களிலிருந்து விமானங்கள் வராது…. கொல்கத்தா விமான நிலையம் தகவல்

 

சென்னை உள்பட 6 நகரங்களிலிருந்து  விமானங்கள் வராது…. கொல்கத்தா விமான நிலையம் தகவல்

மேற்கு வங்கத்தில் முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையிலான அரசு அண்மையில், நம் நாட்டில் கொரேனா வைரஸால் மோசமாக பாதிக்கப்பட்ட (பாதித்தவர்கள் எண்ணிக்கை) டாப் 5 மாநிலங்களிலிருந்து மேற்கு வங்கத்துக்கு ரயில்கள், விமானங்களை மேற்கு வங்கத்துக்கு அனுப்ப வேண்டாம் என மத்திய அரசுக்கு கடிதம் எழுதியது. கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்கும் நோக்கில் இந்த நடவடிக்கையை மேற்கு வங்க அரசு மேற்கொண்டது.

சென்னை உள்பட 6 நகரங்களிலிருந்து  விமானங்கள் வராது…. கொல்கத்தா விமான நிலையம் தகவல்

இந்நிலையில் நேற்று சென்னை உள்பட 6 நகரங்களிலிருந்து கொல்கத்தாவுக்கு விமான சேவை ரத்து செய்யப்பட்டுள்ளதாக கொல்கத்தா விமான நிலையம் தகவல் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக கொல்கத்தா விமான நிலையம் டிவிட்டரில், 2020 ஜூலை 6ம் தேதி முதல் 19ம் தேதி வரை அல்லது அடுத்த உத்தரவு இவற்றில் எது முதலில் வருகிறதோ அதுவரை சென்னை, டெல்லி, மும்பை, புனே, அகமதாபாத் மற்றும் நாக்பூர் ஆகிய 6 நகரங்களிலிருந்து கொல்கத்தாவுக்கு விமான சேவைகள் இயக்கப்படாது. இதனால் ஏற்படும் சிரமத்துக்கு வருத்தம் தெரிவிக்கிறோம் என அதில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

சென்னை உள்பட 6 நகரங்களிலிருந்து  விமானங்கள் வராது…. கொல்கத்தா விமான நிலையம் தகவல்

நம் நாட்டில் கொரோனா வைரஸால் மோசமாக பாதிக்கப்பட்ட மாநிலங்களின் பட்டியலில் மேற்கு வங்கம் 6வது இடத்தில் உள்ளது. நேற்று காலை நிலவரப்படி, அம்மாநிலத்தில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 20,488ஆக உயர்ந்துள்ளது. அதில் 13,571 பேர் கொரோனாவிலிருந்து மீண்டுள்ளனர், 6,200 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். கொரோனா வைரஸ் தொற்று நோய்க்கு இதுவரை அம்மாநிலத்தில் 717 பேர் பலியாகி உள்ளனர்.