விமானங்கள் ரத்து…பயணிகளுக்கு தெரிவிக்கவில்லை – மும்பை விமான நிலையத்தில் குளறுபடி

 

விமானங்கள் ரத்து…பயணிகளுக்கு தெரிவிக்கவில்லை – மும்பை விமான நிலையத்தில் குளறுபடி

மும்பை: விமானங்கள் ரத்து செய்யப்பட்டது குறித்து பயணிகளுக்கு அறிவிக்காததால் மும்பை விமான நிலையத்தில் குளறுபடிகள் ஏற்பட்டது.

இரண்டு மாதங்களுக்குப் பிறகு இன்று காலை இந்தியா முழுவதும் பல விமான நிலையங்களில் உள்நாட்டு விமான சேவைகள் மீண்டும் தொடங்கியது. நாட்டின் பரபரப்பான விமான நிலையமான மும்பை சத்ரபதி சிவாஜி சர்வதேச விமான நிலையம் இன்று முதல் தினமும் 50 விமானங்களை இயக்குகிறது. இன்று முதல் விமானமாக மும்பை-பாட்னா விமானம் மும்பை விமான நிலையத்திலிருந்து காலை 6:45 மணிக்கு புறப்பட்டது.

விமானங்கள் ரத்து…பயணிகளுக்கு தெரிவிக்கவில்லை – மும்பை விமான நிலையத்தில் குளறுபடி

இந்தநிலையில், மும்பை விமான நிலையத்தில் சில குழப்பங்கள் ஏற்பட்டது. பல பயணிகள் தங்களது விமானங்கள் ரத்து செய்யப்பட்டதாகவும், விமான நிறுவனங்களிடமிருந்து அதுகுறித்து எந்த அறிவிப்பும் தங்களுக்கு கிடைக்கவில்லை என்றும் புகார் கூறினர்.

“நாங்கள் டெல்லிக்குச் செல்ல வேண்டும். விமானம் ரத்து செய்யப்பட்டதாக நாங்கள் விமான நிலையத்திற்கு வந்த பிறகு தான் எங்களுக்குத் தெரிவிக்கப்பட்டது” என்று ஒரு பெண் தனது சூட்கேஸில் அமர்ந்தபடி சோகத்துடன் கூறினார்.