கொழுப்பைக் கரைக்கும் ஃபிளாக்ஸ் விதைப் பொடி!

 

கொழுப்பைக் கரைக்கும் ஃபிளாக்ஸ் விதைப் பொடி!

உடல் பருமன், ரத்தத்தில் கொலஸ்டிரால் அதிகரிப்பு பிரச்னைக்கு வீட்டிலேயே எளிய கை வைத்தியம் உள்ளது.

தேவையானவை:

கொழுப்பைக் கரைக்கும் ஃபிளாக்ஸ் விதைப் பொடி!

ஃபிளாக்ஸ் விதை (ஆளி விதை), சீரகம், வெந்தயம் – தலா 100 கிராம்.

இந்த மூன்றையும் ஒன்றாக சேர்த்து மிக்ஸியில் அரைத்து காற்று புகா பாட்டிலில் அடைத்து வைத்துக்கொள்ள வேண்டும்.

தினமும் காலையில் வெதுவெதுப்பான நீரில் இந்த பொடி ஒரு டீஸ்பூன் கலந்து அருந்தி வர வேண்டும்.

ஃபிளாக்ஸ் விதை, சீரகம், வெந்தயத்துடன் கொள்ளு பயிரையும் வறுத்து அரைத்து சேர்த்துக்கொள்ளலாம். விரைவான பலனை அது கொடுக்கும்.

ஃபிளாக்ஸ் விதையை மட்டும் தனியாக அரைத்து ஒரு டம்ளர் மோரில் ஒரு டீஸ்பூன் ஆளி விதை கலந்து அருந்தி வரலாம்.

பலன்கள்

தொடர்ந்து  அருந்தி வந்தால், 10 நாளில் அரை கிலோ வரை உடல் எடை குறையும். மூன்று மாதங்களில் நல்ல பலனை உணர முடியும்.

ஆளிவிதையில் உள்ள சத்துக்கள் இதயத்தைப் பாதுகாக்கும். இதில் உள்ள நார்ச்சத்து, உடல் எடையைக் குறைக்கும்.

வெந்தயம் செரிமானத்தை மேம்படுத்தும். சர்க்கரை நோய்க்கு நல்ல மருந்து.  ரத்த அழுத்தம் கட்டுக்குள் வரும்.

ஃபிளாக்ஸ் விதையில் ஒமேகா 3 கொழுப்பு அமிலம் மற்றும் நல்ல கொழுப்பு அதிக அளவில் உள்ளது. தொடர்ந்து இதை எடுத்து வந்தால் மூன்றே மாதத்தில் கெட்ட கொழுப்பு அளவு 20 சதவிகிதம் அளவுக்குக் குறைந்துவிடும். இதில் Lignans என்ற ரசாயனம் உள்ளது. இது புற்றுநோய் செல்கள் உற்பத்தி ஆவதைத் தடுக்கிறது.