மேற்கு வங்கத்தில் அடுத்த திருப்பம்.. பா.ஜ.க.வுக்கு தாவிய 5 திரிணாமுல் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள்

மேற்கு வங்கத்தில் அடுத்த திருப்பம்.. பா.ஜ.க.வுக்கு தாவிய 5 திரிணாமுல் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள்

மேற்கு வங்கத்தில் திரிணாமுல் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் 5 பேர் நேற்று பா.ஜ.க.வில் இணைந்தனர்.

மேற்கு வங்க சட்டப்பேரவை தேர்தல் வரும் 27ம் தேதி தொடங்கி மொத்தம் 8 கட்டங்களாக நடைபெற உள்ளது. இந்த தேர்தல் ஆளும் கட்சியான திரிணாமுல் காங்கிரசுக்கு வாழ்வா சாவா போன்றது. அந்த மாநிலத்தில் அசுர வளர்ச்சி கண்டு வரும் பா.ஜ.க., மம்தாவுக்கு பயத்தை காட்டி வருகிறது. எகிறி வரும் பா.ஜ.க.வின் செல்வாக்கை பார்த்து மற்ற கட்சியினர் பா.ஜ.க.வில் இணைந்து வருகின்றனர்.

மேற்கு வங்கத்தில் அடுத்த திருப்பம்.. பா.ஜ.க.வுக்கு தாவிய 5 திரிணாமுல் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள்
மம்தா பானர்ஜி, பா.ஜ.க.

குறிப்பாக திரிணாமுல் காங்கிரசில் இருந்த சுவேந்து ஆதிகாரி போன்றவர்கள் கட்சி தலைமையுடன் ஏற்பட்ட மனகசப்பு காரணமாக பா.ஜ.க.வில் இணைந்தனர். இந்நிலையில் திரிணாமுல் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் 5 பேர் நேற்று பா.ஜ.க.வில் இணைந்தனர். திரிணாமுல் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களில் சோனாலி குஹா, சிதல் சர்தார், தீபேண்டு பிஸ்வாஸ், ரவீந்திரநாத் பட்டாச்சார்யா மற்றும் ஜட்டு லஹிரி ஆகியோர் மேற்கு வங்க பா.ஜ.க. தலைவர் திலீப் கோஷ், துணை தலைவர் முகுல் ராய், சுவேந்து ஆதிகாரி முன்னிலையில் பா.ஜ.க.வில் இணைந்தனர்.

மேற்கு வங்கத்தில் அடுத்த திருப்பம்.. பா.ஜ.க.வுக்கு தாவிய 5 திரிணாமுல் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள்
திரிணாமுல் காங்கிரஸ்

மேலும், திரிணாமுல் காங்கிரஸ் சார்பில் ஹீபீபூர் தொகுதி வேட்பாளராக அறிவிக்கப்பட்ட சரளா முர்முவும் பா.ஜ.க.வில் இணைந்தார். 5 எம்.எல்.ஏ.க்கள் மற்றும் கட்சி சார்பில் வேட்பாளராக நிறுத்தப்பட்ட நபரும் பா.ஜ.க.வில் இணைந்தது மம்தா பானர்ஜிக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது. ஹீபீபூர் தொகுதிக்கு முர்முவுக்கு பதிலாக வேறு நபரை திரிணாமுல் காங்கிரஸ் அறிவித்து விட்டது.