பிரான்சில் இருந்து இந்தியாவுக்கு புறப்பட்டன ஐந்து ரஃபேல் விமானங்கள்!

 

பிரான்சில் இருந்து இந்தியாவுக்கு புறப்பட்டன ஐந்து ரஃபேல் விமானங்கள்!

பிரான்சிடம் இருந்து இந்தியா ரஃபேல் விமானங்களை வாங்கியுள்ளது. முதல் கட்டமாக ஐந்து விமானங்கள் பிரான்சில் இருந்து இந்தியா நோக்கிப் புறப்பட்டுள்ளன.
இந்திய விமானப்படையை நவீனப்படுத்தும் வகையில் ரஃபேல் போர் விமானங்களை வாங்க பல ஆண்டுகளாக பேச்சு வார்த்தை நடந்தது. இதன் அடிப்படையில்

பிரான்சில் இருந்து இந்தியாவுக்கு புறப்பட்டன ஐந்து ரஃபேல் விமானங்கள்!

இந்தியாவுக்கும் பிரான்சுக்கும் ஒப்பந்தம் கையெழுத்தாகியது. முதல் கட்டமாக ஐந்து ரஃபேல் போர் விமானங்கள் இந்தியாவுக்கு வழங்கப்பட்டுள்ளது. இதை இந்திய விமானப்படை விமானிகள் பிரான்ஸ் சென்று எடுத்து வருகின்றனர். பிரான்சில் இருந்து புறப்பட்ட விமானங்களை பிரான்சுக்கான இந்தியத் தூதர் வழியனுப்பி வைத்தார்.

பிரான்சில் இருந்து இந்தியாவுக்கு புறப்பட்டன ஐந்து ரஃபேல் விமானங்கள்!
பிரான்சில் இன்று புறப்பட்ட விமானங்கள் ஐக்கிய அரபு எமிரேட்டில் உள்ள அல்தர்ஸா விமானப்படை தளத்தில் தரையிறக்கப்படும். ஐக்கிய அரபு எமிரேட் வரும் வரையில் தேவையான எரிபொருளை பிரான்ஸ் விமானப்படையின் எரிபொருள் டேங்க் விமானம் வழங்கும். ஐக்கிய அரபு எமிரேட்சில் ஓய்வுக்குப் பிறகு எரிபொருள் நிரப்பப்பட்டு 29ம் தேதி பஞ்சாப் மாநிலம் அம்பாலா விமானப்படை தளத்தை வந்து சேரும். முன்னதாக இந்திய விமானப்படை வீரர்கள் 12 பேருக்கு ரஃபேல் போர் விமானங்களை இயக்குவது தொடர்பான பயிற்சியை பிரான்ஸ் வழங்கியிருந்தது. அவர்கள்தான் தற்போது விமானத்தை பிரான்ஸிலிருந்து இந்தியாவுக்கு எடுத்து வருகின்றனர்.