“திட்டு வாங்கி சம்பளம் வாங்குவதை விட, தட்டு நிறைய பிச்சையெடுக்கிறோம் ” -பெருகி வரும் பட்டதாரி பிச்சைக்காரர்கள்.

“திட்டு வாங்கி சம்பளம் வாங்குவதை விட, தட்டு நிறைய பிச்சையெடுக்கிறோம் ” -பெருகி வரும் பட்டதாரி பிச்சைக்காரர்கள்.

ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் அரசாங்கம் மாநிலத்தில் பிச்சைக்காரர்களின் எண்ணைக்கையை குறைக்கும் பொருட்டு அங்குள்ள பிச்சைக்காரர்களின் கணக்கெடுப்பை நடத்தியது .அப்போது ஜெய்ப்பூரில் பிசையெடுக்கும் 1600 பிச்சைக்காரர்களில் 5 பேர் மாஸ்டர் டிகிரி வாங்கியவர்களேன்றும் .100க்கு மேற்பட்டோர் 12 ம் வகுப்புக்கு மேல் படித்தவர்களென்றும் கண்டு அதிர்ந்து போனார்கள் .

“திட்டு வாங்கி சம்பளம் வாங்குவதை விட, தட்டு நிறைய பிச்சையெடுக்கிறோம் ” -பெருகி வரும் பட்டதாரி பிச்சைக்காரர்கள்.

அவர்களிடம் எதனால் இப்படி பிச்சையேக்கிறீர்கள், வேலை வாங்கிக்கொடுத்தால் போவீர்களா என்று கேட்ட போது தாங்கள் வேலைக்கு செல்லவிரும்பவில்லை என்று பெரும்பாலான பிச்சைக்காரர்கள் கூறுகிறார்கள்
ஏனென்றால் வேலைக்கு போய் கஷ்டப்பட்டு உழைத்து மேனேஜரிடமும் திட்டு வாங்கி ,வீட்டுக்கு வந்த சம்பளம் பத்தாமல் பொண்டாட்டியிடமும் திட்டு வாங்கி வாழும் அடிமை வாழ்க்கை தங்களுக்கு பிடிக்கவில்லையென்றும் ,இந்த சுதந்திரமான வாழ்க்கையில் வேலைக்கு போவதை விட நிறைய சம்பாதிப்பதாகவும் அந்த பட்டதாரி பிச்சைக்காரர்கள் கூறினார்கள் .
அதில் அதிக பிச்சைக்காரர்கள் 31வயதிலிருந்து 40 வயதுக்குள் நல்ல உடல்நிலையுடன் திடகாத்திரமாக இருப்பது கண்டு அதிகாரிகள் அதிர்ச்சியடைந்தார்கள் .10 வயதுக்கு கீழே 50 க்கும் குறைவானவர்களென்றும் ,ஊனமுற்றவர்கள் கூட குறைவானவர்களே என்றும் தெரிய வந்துள்ளது
மேலும் உள்ளூர் மக்கள்தான் பெரும்பாலான பிச்சைக்காரர்களென்றும் ,அதில் தமிழ்நாட்டுக்காரகள் ஒருவர் இருக்கிறாரென்றும் அந்த ஆய்வில் தெரியவந்துள்ளது .

“திட்டு வாங்கி சம்பளம் வாங்குவதை விட, தட்டு நிறைய பிச்சையெடுக்கிறோம் ” -பெருகி வரும் பட்டதாரி பிச்சைக்காரர்கள்.