சிபிஐ அதிகாரி வேஷம் போட்டு -டாக்டர் வீட்டில் ஆட்டைய போட்டு -சினிமா போல நடந்த மோசடி

 

சிபிஐ அதிகாரி வேஷம் போட்டு -டாக்டர் வீட்டில் ஆட்டைய போட்டு -சினிமா போல நடந்த மோசடி

டெல்லியில் வசிக்கும் அமித் என்ற நபர் பிட்டு, சுரேந்தர் ,பவன் மற்றும் விபா ஆகியோரை கூட்டாளராக சேர்த்து கொண்டு அங்குள்ள ஒரு டாக்டர் வீட்டில் சிபிஐ அதிகாரி என்று பொய் சொல்லி பல லட்சங்களை கொள்ளையடித்து சென்றார்கள்

சிபிஐ அதிகாரி வேஷம் போட்டு -டாக்டர் வீட்டில் ஆட்டைய போட்டு -சினிமா போல நடந்த மோசடி

இந்த ஐந்து பேர் கொண்ட கும்பல் டெல்லியின் பிதாம்புராவில் உள்ள மருத்துவர் வீட்டிற்கு தங்களை சிபிஐ அதிகாரிகளாக காட்டிக்கொண்டு,சோதனையிட தொடங்கினர் . அப்போது அவர்கள் அந்த டாக்டரிடம் அவரின் வீட்டில் கறுப்புப் பணம் இருப்பதாக கூறி சோதனை நடத்தினார்கள்
அப்போது அவர்கள் டாக்டரின் குடும்பத்திலிருந்து பல மொபைல் போன்களை எடுத்தார்கள். மேலும் இந்த சோதனையின் சாக்குப்போக்கில், அவர்கள் ரூ .36 லட்சம் ரொக்கம், 3,852 அமெரிக்க டாலர், மற்றும் 400 யூரோக்கள் மற்றும் ரூ .5 லட்சம் மதிப்புள்ள தங்க நகைகளை சூறையாடினர்.
மேலும் இந்த ஐந்து பேரும் மருத்துவரின் குடும்பத்தை பயமுறுத்தி அனைத்து மோசடிகளையும் செய்திருந்தனர்.பிறகு அவர்கள் டாக்டரின் வீட்டைக் கொள்ளையடித்த பிறகு, மருத்துவரின் ஓட்டுநரை டாக்டரின் கிளினிக்கிற்கு அழைத்துச் செல்லும்படி அவர்கள் கேட்டார்கள். ஆனால் அந்த டிரைவர் காவல் நிலையத்திற்கு தகவல் சொன்னார் . உடனே காவல்துறையினர் விரைந்து செயல்பட்டு , குற்றம் சாட்டப்பட்ட 3 பேரை உடனடியாகப் பிடித்தனர், அவர்களில் இருவர் இன்னும் தலைமறைவாக உள்ளனர். பின்னர் அவர்களிடமிருந்து போலி அடையாள அட்டைகள், ஆவணங்கள் மற்றும் கொள்ளையடிக்கப்பட்ட நகைகள் மற்றும் பணம் ஆகியவை மீட்கப்பட்டுள்ளன. பிறகு தப்பி ஓடிய இருவரையும் போலீசார் இன்னும் தேடி வருகின்றனர்.

சிபிஐ அதிகாரி வேஷம் போட்டு -டாக்டர் வீட்டில் ஆட்டைய போட்டு -சினிமா போல நடந்த மோசடி