• February
    22
    Saturday

Main Area

Main



20 வயது பெண்ணை காதலித்து விட்டு 'பாபநாசம்' பாணியில் கொன்று புதைத்த 60 வயது பாஜக பிரமுகர்: அதிர்ச்சி தரும் சம்பவம்!

murder
murder

மத்தியபிரதேசம்: பாபநாசம் திரைப்பட பாணியில் காங்கிரஸ் கட்சியை சேர்த்த இளம் பெண்ணைக் கொன்று புதைத்த பாஜக பிரமுகர் மகன்களுடன் கைது செய்யப்பட்டார்.

மத்தியபிரதேச மாநிலம் இந்தூரைச் சேர்ந்தவர் பாஜக தலைவர்களில் ஒருவரான ஜெகதீஷ் கரோடியா.  இவருக்கு அஜய், விஜய், வினய் என்ற மூன்று மகன்கள் இருந்துள்ளனர். ஜெகதீஷுக்கு, அதே பகுதியை சேர்ந்த டிவிங்கிள் டாக்ரே என்ற பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டது. காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவரான அந்தப் பெண்ணுடனான பழக்கம், நாளடைவில் தகாத உறவுக்கு மாறியது. இதையடுத்து அந்தப் பெண், ஜெகதீஷிடம் தன்னை திருமணம் செய்து கொள்ளும்படி கேட்டுள்ளார்.  இதற்கு ஜெகதீஷ் குடும்பத்தினர் கடும்  எதிர்ப்புத் தெரிவித்தனர்.

murder

டிவிங்கிள் ஜெகதீஷிடம் தொடர்ந்து திருமணத்துக்கு வற்புறுத்திக்கொண்டே இருந்ததாகக் கூறப்படுகிறது. இதனால் வெறுப்படைந்த ஜெகதீஷ், தனது மகன்களுடன் சேர்ந்து திட்டம் ஒன்றைத் தீட்டினார். அதன்படி, 2016ம் ஆண்டு அக்டோபர் 16ஆம் தேதி டிவிங்கிளை அழைத்து உனக்கு, இடம் பார்த்து வைத்திருக்கிறேன். உன் பெயருக்கு எழுதி வைக்க இருக்கிறேன். வா, பார்த்துவிட்டு வரலாம் என்று கூறியுள்ளார்.

இதை நம்பி உடன் சென்ற  டிவிங்கிளை ஜெகதீஸ் மகன்களுடன் இணைந்து  கழுத்தை நெரித்துக் கொன்று பெட்ரோல் ஊற்றி எரித்துள்ளார். பின்னர்  ஓர் இடத்தில் புதைத்துவிட்டு ஒன்றும் தெரியாதது போல வந்துள்ளார்.

murder

டிவிங்கிளின் பெற்றோர், மகளை காணவில்லை என்று புகார் கொடுத்தனர். ஏற்கனவே தனது காதலை எதிர்த்த பெற்றோர் மீது டிவிங்கிள் புகார் தெரிவித்திருந்ததால், போலீசாருக்கு அவர்கள் மீது சந்தேகம் ஏற்பட்டது. தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்திக் கொண்டிருந்தனர்.டிம்பிள் பற்றி எந்த தகவலும் கிடைக்காததால், வழக்கைக் கிடப்பில் போட்டனர். சம்பவம் நடந்து 2 வருடங்களாகிவிட்டது

இந்நிலையில், மூளை மின் அலை ரேகைப்பதிவு (Brain Electrical Oscillation Signature (BEOS) என்ற நவீன முறை சோதனையின் படி விசாரணை நடத்த போலீசார் முடிவு செய்தனர். டிவிங்கிளின் பெற்றோரிடமும், ஜெகதீஷிடம் இந்த சோதனை நடத்தப்பட்டது. பின்னர் உண்மை வெளியானது. 

murder

இதுபற்றி போலீஸ் டிஜிபி மிஸ்ரா கூறும்போது, மூளை மின் அலை ரேகைப்பதிவு சோதனை மூலம் இந்த வழக்கு முடிவுக்கு வந்திருக்கிறது. ஜெகதீஷும் அவர் மகன்களும் கொலைக்கு முன், அஜய்தேவ்கன் நடித்த த்ரிஷயம் படத்தைப் பார்த்துள்ளனர். அந்தப் படத்தின் கதைப்படி வழக்கை திசை திருப்ப முயன்றுள்ளனர். இப்போது ஜெகதீஷ், அஜய், விஜய், வினய்  கைது செய்யப்பட்டுள்ளனர். த்ரிஷயம் திரைப்படம் தமிழில் கமல் நடிப்பில் பாபநாசம் என்ற பெயரில் வெளியானது குறிப்பிடத்தக்கது.

2018 TopTamilNews. All rights reserved.