சருமம் காக்கும் இயற்கை உணவுகள் ஐந்து!

 

சருமம் காக்கும் இயற்கை உணவுகள் ஐந்து!

பொலிவான, மென்மையான சருமம் வேண்டும் என்பதில் எல்லோருக்கும் விருப்பம் உண்டு. அதற்காக கண்ட கண்ட ரசாயனங்களைப் பயன்படுத்துவது அதிகரிக்கிறது. அழகான சருமம் பெற தொடர்ந்து எடுத்துக்கொள்ள வேண்டிய  ஐந்து உணவுகள் பற்றி தெரிந்துகொள்வோம்!

சருமம் காக்கும் இயற்கை உணவுகள் ஐந்து!

குடை மிளகாய்

குடை மிளகாய் மிகக் குறைவான கலோரி கொண்டது. இதை சிலர் பச்சையாகக் கூட எடுத்துக்கொள்வது உண்டு. பச்சை, மஞ்சள், சிவப்பு குடைமிளகாயில் அதிக அளவில் வைட்டமின் சி உள்ளது. இது சருமத்தில் கொலாஜன் உற்பத்தியைத் தூண்டுகிறது. சருமம் பாதிப்படைவதைத் தடுத்து சுருக்கங்களை நீக்குகிறது. இதில் உள்ள ஊட்டச்சத்துக்கள் சருமத்தை இளமையாக வைத்திருக்க உதவுகின்றன.

டார்க் சாக்லெட்

டார்க் சாக்லெட் சருமத்துக்கான ரத்த ஓட்டத்தை அதிகரிக்கச் செய்கிறது. இதனால் சருமத்துக்கு அதிக ஈரப்பதம், ஊட்டச்சத்து கிடைக்கிறது. இவை சருமத்தை பொலிவாக மாற்றுகிறது. இதில் உள்ள ஆன்டிஆக்சிடண்ட் உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்ற உதவுகிறது. இதில் உள்ள ஃபிளவனாய்ட் மற்றும் ஆன்டிஆக்ஸிடண்ட் மென்மையான சருமத்தை தருகிறது. சிவப்பு ஒயினைக் காட்டிலும் டார்க் சாக்லெட்டில் ஆன்டிஆக்ஸிடண்ட் அதிகம்.

க்ரீன் டீ

க்ரீன் டீ உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்றும் தன்மை கொண்டது. சருமத்தில் தேங்கியிருக்கும் நச்சுக்கள் வெளியேறுவதன் மூலம் சருமம் பொலிவும் ஆரோக்கியமும் பெறும்.

விதைகள்

சூரியகாந்தி, பிளாக்ஸ், பூசனி உள்ளிட்ட விதைகளில் உடலுக்குத் தேவையான அத்தியாவசிய கொழுப்பு அமிலங்கள் அதிக அளவில் உள்ளன. இதன் மூலம் சருமத்தைப் பாதுகாக்கும் வைட்டமினான இ நமக்கு அதிக அளவில் கிடைக்கிறது. இது சருமத்தின் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது.

பப்பாளி

கலோரி குறைந்தது ஆனால் சுவையான பழம் பப்பாளி. இது நம் உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்றும் தன்மை கொண்டது. இதில் உள்ள வைட்டமின் சி, இ மற்றும் பீட்டா கரோட்டின் சருமத்ததுக்கு புத்துணர்வு அளிக்கின்றன. பப்பாளியில் உள்ள  lycopene சருமத்தில் உள்ள சுருக்கங்களை நீக்குகின்றன. இதில் உள்ள chymopapain முகப்பரு உள்ளிட்ட பிரச்னைகள் வராமல் காக்கிறது.