மாரடைப்புக்கு ஐந்து காரணங்கள்! – தடுக்க செய்ய வேண்டியது என்ன?

 

மாரடைப்புக்கு ஐந்து காரணங்கள்! – தடுக்க செய்ய வேண்டியது என்ன?

காலையில் கூட பார்த்தேன் நல்லா பேசினார், திடீர்னு நெஞ்சு வலிக்குதுன்னு ஆஸ்பிட்டல் தூக்கிட்டுப் போனாங்க. மேசிவ் அட்டாக், முடிஞ்சிடுச்சின்னு சொல்லிட்டாங்க… இப்படி நம்முடைய வாழ்வில் நாம் கேள்விப்படாத நபர்களே இருக்க மாட்டார்கள். திடீரென்று உயிரைக்கொல்லும் மாரடைப்பு பிரச்னை ஒரே நாளில் உருவாகிவிடுவது இல்லை. மாரடைப்பு வருவதற்கான ஐந்து காரணங்களைப் பற்றி பார்ப்போம்…
உயர் ரத்த அழுத்தம்:

மாரடைப்புக்கு ஐந்து காரணங்கள்! – தடுக்க செய்ய வேண்டியது என்ன?உயர் ரத்த அழுத்தம் கட்டுக்கள் இல்லை என்றால் அது கொஞ்சம் கொஞ்சமாக ரத்த நாளத்தின் சுவர்களை பாதிக்கிறது. இதயத்துக்கு ரத்தம் செல்லும் கொரோனரி ரத்தக் குழாய்கள் தடித்து, வீங்குவதால் ரத்த ஓட்டம் தடைப்படுகிறது. ஒரு கட்டத்தில் அது மாரடைப்பு பாதிப்பை ஏற்படுத்தும்.
உடல் பருமன்:

மாரடைப்புக்கு ஐந்து காரணங்கள்! – தடுக்க செய்ய வேண்டியது என்ன?
உடல் பருமன் இதய நோய்க்கு மட்டுமல்ல, உடலின் எல்லா பிரச்சினைக்குமே மூல காரணமாக இருக்கிறது. உடல் பருமன் இருப்பவர்களுக்கு டிரைகிளரைட் என்ற கெட்ட கொழுப்பு அளவு அதிகமாக இருக்கும். இது உயர் ரத்த அழுத்தம், சர்ச்சரைநோய் உள்ளிட்டவற்றுக்கு காரணமாக அமைந்துவிடுகிறது. உடல் எடையில் 10 சதவிகிதத்தை குறைத்தாலே முன்பு இருந்ததற்கும் தற்போது உள்ளதற்கும் வித்தியாசத்தை உணர முடியும்.
கொழுப்பு:

மாரடைப்புக்கு ஐந்து காரணங்கள்! – தடுக்க செய்ய வேண்டியது என்ன?
கெட்ட கொழுப்பு எனப்படும் எல்.டி.எல் அளவு அதிகரிப்பது ரத்தக் குழாய்களை குறுகச் செய்கிறது. இதனுடன் டிரைகிளசரைட் அளவு அதிகரிப்பது மாரடைப்புக்கான வாய்ப்பை அதிகரிக்கிறது. எனவே, எல்.டி.எல் கொழுப்பைக் குறைத்து, எச்.டி.எல் எனப்படும் நல்ல கொழுப்பு உள்ள உணவை எடுத்துக்கொள்ள வேண்டும்.
சர்க்கரை நோய்:

மாரடைப்புக்கு ஐந்து காரணங்கள்! – தடுக்க செய்ய வேண்டியது என்ன?
சர்க்கரை நோய் கட்டுக்குள் இல்லாதவர்களுக்கும் மாரடைப்பு வருவதற்கான வாய்ப்பு அதிகம். ரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகரிக்கும்போது அது ரத்த நாளங்களின் சுவர்களில் விரிசல் உள்ளிட்ட பாதிப்பை ஏற்படுத்தி வீக்கத்தை ஏற்படுத்துகிறது. இதில் இன்னொரு பிரச்னை என்ன என்றால், சர்க்கரை நோய் உள்ளவர்களுக்கு மாரடைப்பின் அறிகுறிகள் தெரியாமலேயே கூட போகலாம். எனவே, சர்க்கரை அளவைக் கட்டுக்குள் வைத்திருக்க முயற்சிக்க வேண்டும்.
மன அழுத்தம்:
மன அழுத்தம் கூட மாரடைப்புக்கு காரணமாகலாம். நீண்ட நாட்களாக மன அழுத்தத்தில் உள்ளவர்களுக்கு ரத்த அழுத்தம் அதிகரிக்கிறது. நல்ல கொழுப்பான எச்.டி.எல் அளவு குறைகிறது. நிதி, உடல்நலம், குடும்பப் பிரச்னை என்று ஆயிரம் பிரச்னைகள் மன அழுத்தத்துக்கு காரணமாக இருக்கலாம். மன அழுத்தம் தவிர்க்கும் பயிற்சிகளை மேற்கொண்டு அதை போக்க முயற்சிக்க வேண்டும். மன அழுத்தத்தோடு இருந்தால் மட்டும் பிரச்னை சரியாகிவிடாது,

மாரடைப்புக்கு ஐந்து காரணங்கள்! – தடுக்க செய்ய வேண்டியது என்ன?

மன அழுத்தத்தைவிட்டு பிரச்னையை எதிர்கொள்ள தயாராக வேண்டும் என்கின்றனர் மருத்துவர்கள்.
இது தவிர வயது, புகைப்பழக்கம், சரியான தூக்கமின்மை, குடும்ப மரபியல் தொடர்பு என்று மாரடைப்பு வர வேறு சில காரணங்களும் உள்ளன. ஆண்டுக்கு ஒரு முறையாவது எளிய மருத்துவ பரிசோதனை செய்துகொள்வதன் மூலம் மாரடைப்பு வருவதற்கான வாய்ப்பு கண்டறியப்பட்டால் அதில் இருந்து தப்பிக்க முயலலாம். மருத்துவக் காப்பீடு இருந்தால் மாரடைப்பு நேரத்தில் பண தேவைகளை சமாளிக்க முடியும். டேர்ம் பாலிசி போன்ற ஏதாவது எடுத்திருந்தால் நாம் மறைந்தாலும் நம்முடைய குடும்பம் ஓரளவு நிதி தொடர்பான பிரச்னையில் இருந்து சமாளித்துக்கொள்ளும். முயற்சி செய்வோம், மாரடைப்பைத் தவிர்ப்போம்!