ஜூன் 1 ஆம் தேதி முதல் மீனவர்கள் கடலுக்கு செல்ல அனுமதி – அமைச்சர் ஜெயக்குமார்

 

ஜூன் 1 ஆம் தேதி முதல் மீனவர்கள் கடலுக்கு செல்ல அனுமதி – அமைச்சர் ஜெயக்குமார்

கொரோனா வைரஸ் இந்தியாவில் கடும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை லட்சத்தை கடந்துச் செல்கிறது. இருப்பினு, நான்காம் கட்ட ஊரடங்கில் சில தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளன.இதனிடையே ஊரடங்கள் படகுகள், எந்திரம் பொருந்திய மற்றும் இயந்திரம் பொருத்தப்பட்ட படகுகள் மீன் பிடிக்க செல்ல தடை விதிக்கப்பட்டது. இது தொடர்பாக மத்திய அரசு வெளியிட்ட அறிவிப்பில் கிழக்கு கடற்கரை பகுதியில் ஏப்ரல் 15 முதல் ஜூன் 14-ம் தேதி மீன் பிடிக்கக் கூடாது என்றும் மேற்கு கடற்கரைப் பகுதியில் ஜூன் 1-ஆம் தேதி முதல் ஜூலை 31 -ம் தேதி மீன் பிடிக்க கூடாது என்றும் அறிவிக்கப்பட்டது.

ஜூன் 1 ஆம் தேதி முதல் மீனவர்கள் கடலுக்கு செல்ல அனுமதி – அமைச்சர் ஜெயக்குமார்

அதனால் மீனவர்களின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு தடையை குறைக்குமாறு மீன்வளத்துறை அமைச்சர் மத்திய அரசுக்கு கடிதம் எழுதினார். அதன் படி, கிழக்கு கடற்கரை பகுதியில் மே-31 ஆம் தேதி வரையிலும் மேற்கு கடற்கரைப் பகுதியில் ஜூன் 15 முதல் 31 ஆம் தேதி வரை தடைகாலம் குறைக்கப்பட்டது. அதன் படி மே 31 ஆம் தேதியோடு கிழக்கு கடற்கரைப்பகுதிக்கான தடைகாலம் முடிவடைவதால், வரும் ஜூன் 1 ஆம் தேதி முதல் மீனவர்கள் மீன்பிடிக்க செல்லலாம் என்று அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். மேலும், மேற்கு கடற்கரைப் பகுதி மீனவர்கள் ஆகஸ்ட் 1 ஆம் தேதி முதல் மீன் பிடிக்க செல்லலாம் என்றும் தெரிவித்துள்ளார்.