20 ஆண்டுகளுக்கு பின் நடந்த மீன்பிடி திருவிழா… குளத்தில் ஆர்வமுடன் மீன்பிடித்த கிராம மக்கள்!

 

20 ஆண்டுகளுக்கு பின் நடந்த மீன்பிடி திருவிழா… குளத்தில் ஆர்வமுடன் மீன்பிடித்த கிராம மக்கள்!

திண்டுக்கல்

திண்டுக்கல் அருகே ஒற்றுமையை வளர்க்கும் விதமாக நடந்த மீன்பிடி திருவிழாவில் ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டு குளத்தில் மீன்களை பிடித்து மகிழ்ந்தனர்.

திண்டுக்கல் மாவட்டம் நல்லாம்பட்டி கிராமத்தில் புகழ்பெற்ற முனியப்பன் கோயில் அமைந்துள்ளது. ஆண்டுதோறும் கோவில் திருவிழாவின்போது, அங்குள்ள ராஜா குளத்தில் மீன்பிடி திருவிழா நடைபெறுவது வழக்கம். இதில் ஒற்றுமையை வளர்க்கும் விதமாக சுற்றுவட்டார 18 கிராம மக்கள் கலந்து கொண்டு குளத்தில் மீன்பிடிப்பர். குளத்தில் போதிய தண்ணீர் இல்லாததால் கடந்த 20 ஆண்டுகளாக மீன்பிடி திருவிழா நடைபெறாமல் இருந்து வந்தது.

20 ஆண்டுகளுக்கு பின் நடந்த மீன்பிடி திருவிழா… குளத்தில் ஆர்வமுடன் மீன்பிடித்த கிராம மக்கள்!

நடப்பாண்டு போதிய அளவு தண்ணீர் இருந்ததால், 20 ஆண்டுகளுக்கு பின்பு நேற்று மீன்பிடி திருவிழா விமரிசையாக நடைபெற்றது. இதில், நல்லாம்பட்டி, வாழைக்காப்பட்டி, வேடப்பட்டி உள்ளிட்ட 18 கிராமங்களை சேர்ந்த ஆண்கள், பெண்கள், சிறுவர்கள் என ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பங்கேற்று, குளத்தில் வலைகள், துணிகள் உள்பட பல்வேறு உபகரணங்களை கொண்டு மீன்களை பிடித்தனர்.

பின்னர், பிடித்த மீன்களை தங்களுடைய வீடுகளுக்கு எடுத்துச் சென்று சமைத்து, வெளியூர்களில் இருந்து வந்திருந்த உறவினர்கள், நண்பர்களுக்கு பரிமாறி அன்பை வெளிப்படுத்தினர். 20 ஆண்டுகளுக்கு பின்பு நடந்த இந்த மீன்பிடி திருவிழா காரணமாக நல்லாம்பட்டி சுற்றுவட்டார பகுதி மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.