கடல் சீற்றம் அதிகரிப்பு : 26 ஆம் தேதி வரை மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என எச்சரிக்கை!

கடல் சீற்றம் அதிகரிப்பு : 26 ஆம் தேதி வரை மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என எச்சரிக்கை!

வங்க கடலில் புயல் உருவாகி உள்ளதால் வரும் 26ம் தேதி வரை மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

கடல் சீற்றம் அதிகரிப்பு : 26 ஆம் தேதி வரை மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என எச்சரிக்கை!

வங்கக்கடலில் நிலை கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியது. 4 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் நிவர் புயலாக வலுப்பெறும். தாழ்வு மண்டலம் சென்னையிலிருந்து 740 கி.மீ தொலைவில் மையம் கொண்டுள்ளது. இந்த புயலானது வரும் 25ம் தேதி பிற்பகலில் மகாபலிபுரம், காரைக்கால் இடையே கரையை கடக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

கடல் சீற்றம் அதிகரிப்பு : 26 ஆம் தேதி வரை மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என எச்சரிக்கை!

இந்நிலையில் வங்க கடலில் புயல் உருவாகி உள்ளதால் வரும் 26ம் தேதி வரை மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. திருவள்ளூர் மாவட்ட மீன்வளத்துறை உதவி இயக்குநர் அஜய் ஆனந்த் வலியுறுத்தியுள்ளார். குறிப்பாக கடலூர்,நாகை, பாம்பன் துறைமுகங்களில் 3ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்பட்டுள்ளது. நிவர் புயல் தமிழகத்தை நெருங்குவதால் தனுஷ் கோடி தொடங்கி மரக்காணம் வரை கடல் சீற்றம் அதிகரித்துள்ளது.

கடல் சீற்றம் அதிகரிப்பு : 26 ஆம் தேதி வரை மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என எச்சரிக்கை!

புதுக்கோட்டை மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை இதனால் 750 படகுகள் கரைகளில் நிறுத்தப்பட்டுள்ளது. நாகப்பட்டினம் மாவட்ட மீனவர்கள் கடலுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் 1000 விசை படகுகள், 6000 பைபர் படகுகள் கரைகளில் பாதுகாப்பாக நிறுத்தப்பட்டுள்ளது.