சுங்கச்சாவடியை முற்றுகையிட்டு மீனவர்கள் போராட்டம்

 

சுங்கச்சாவடியை முற்றுகையிட்டு மீனவர்கள் போராட்டம்

ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் சுங்கச்சாவடியில் உள்ளூர் பொதுமக்களிடம் கட்டணம் வசூலிப்பதை கண்டித்து, மீனவர்கள் மற்றும் மீன் ஏற்றுமதியாளர்கள் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். ராமேஸ்வரம் நகராட்சி நிர்வாகத்தின் சார்பில் பேருந்து நிலையம் அருகே சுங்கச்சாவடி அமைத்து, அதன் மூலம் வெளிமாவட்டம் மற்றும் வெளிமாநில வாகன ஓட்டிகளிடம் கட்டணம் வசூல்செய்ய சுமார் ரூ.3.27 கோடிக்கு டெண்டர் விடப்பட்டது.

சுங்கச்சாவடியை முற்றுகையிட்டு மீனவர்கள் போராட்டம்

இந்நிலையில் வெளிமாநில மற்றும் வெளிமாவட்ட வாகனங்களை போன்று, உள்ளூர் வாகனங்களுக்கும் கட்டணம் வசூல் செய்வதாக புகார் எழுந்தது. இந்நிலையில்,மீனவர்கள் பிடித்து வரக்கூடிய மீன்களை வெளி மாநிலத்திற்கு ஏற்றிச்செல்லும் வாகனங்களை சுங்கச்சாவடி ஊழியர்கள் நிறுத்தி பணம் கேட்டதால் வாக்குவாதம் ஏற்பட்டது. இதனையடுத்து, மீனவர்களும், மீன் ஏற்றுமதியாளர்களும் சுங்கச்சாவடியை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் இருதரப்பினரிடையே பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது, சுங்கச்சாவடி ஊழியர்கள் உள்ளூர் வாகனங்களுக்கு கட்டணம் வசூலிக்கக் கூடாது என்றும் நகராட்சி அதிகாரிகளிடம் மீனவர்கள் முறையிட்டனர்.

சுங்கச்சாவடியை முற்றுகையிட்டு மீனவர்கள் போராட்டம்