மீனவர்கள் 9 பேரை 14 நாட்கள் தனிமைப்படுத்த உத்தரவு!

 

மீனவர்கள் 9 பேரை 14 நாட்கள் தனிமைப்படுத்த உத்தரவு!

இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்ட ராமேஸ்வரம் மீனவர்கள் 9 பேரை 14 நாட்கள் தனிமைப்படுத்த உத்தரவிடப்பட்டுள்ளது.

கச்சத்தீவு அருகே கடந்த 9ஆம் தேதி ராமேஸ்வரத்தில் இருந்து சென்ற மீனவர்கள் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது , அங்கு வந்த இலங்கை கடற்படையினர் எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி அவர்கள் மீது தாக்குதல் நடத்தினர். மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் கற்கள் மற்றும் பாட்டில்களை கொண்டு தாக்கியத்துடன், ஒரு படகையும் 9 மீனவர்களையும் சிறைபிடித்து சென்றனர். இந்திய எல்லையில் மீன்பிடித்த மீனவர்களை கைது செய்ததற்கு, பலரும் கண்டனம் தெரிவித்தனர்.

மீனவர்கள் 9 பேரை 14 நாட்கள் தனிமைப்படுத்த உத்தரவு!

இதை தொடர்ந்து எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கைதான 9 மீனவர்களில் ஒருவருக்கு கொரோனா இருப்பது கண்டறியப்பட்டது. காரைநகர் கடற்படை முகாமில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள அவர்களில் ஒருவருக்கு கொரோனா இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

மீனவர்கள் 9 பேரை 14 நாட்கள் தனிமைப்படுத்த உத்தரவு!

இந்நிலையில் இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்ட ராமேஸ்வரம் மீனவர்கள் 9 பேரை 14 நாட்கள் தனிமைப்படுத்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஜனவரி 11இல் கைதான 9 மீனவர்களில் ஒரு மீனவருக்கு கொரோனா உறுதியானதால் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தொற்று உறுதியான மீனவருடன் தங்கியிருந்த 8 பெருகும் கொரோனா பரிசோதனை செய்ய நீதிபதி ஆணை பிறப்பித்துள்ளார்.