மீன்பிடித்தபோது தோட்டா வெடித்ததில், இளைஞரின் கை விரல்கள் துண்டாகின

 

மீன்பிடித்தபோது தோட்டா வெடித்ததில், இளைஞரின் கை விரல்கள் துண்டாகின

ஈரோடு

ஈரோடு அருகே காவிரி ஆற்றில் தோட்டா வீசி மீன்பிடித்த இளைஞரின் கைவிரல்கள் துண்டான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. ஈரோடு மாவட்டம் வைராபாளையம் செங்கோட்டையன் நகரில் வசிப்பவர் வசந்தகுமார் (32). மீனவரான இவர், நேற்று மாலை வைராபாளையம் காவிரி ஆற்றில் மீன்பிடிப்பதற்காக தோனியில் சென்றுள்ளார். அங்கு, வசந்தகுமார் அரசால் தடை செய்யப்பட்ட தோட்டாவை வீசி மீன்பிடித்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில், ஒரு தோட்டாவை, தீயில் வைத்து வீசும்போது, அது எதிர்பாராத விதமாக கையிலேயே வெடித்து சிதறியது. இதில் வசந்தகுமாரின் இரு கைகளிலும் உள்ள 10 விரல்களும் துண்டாகியது.

மீன்பிடித்தபோது தோட்டா வெடித்ததில், இளைஞரின் கை விரல்கள் துண்டாகின

மேலும், அவரது நெஞ்சு பகுதியிலும் காயம் ஏற்பட்டது. அருகில் இருந்த மீனவர்கள் அவரை மீட்டு ஈரோடு அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். பின்னர், மேல் சிகிச்சைக்காக அவர் சேலம் அரசு மருத்துவமனைக் கொண்டு செல்லப்பட்டார். இந்த விபத்து குறித்து கருங்கல்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், தடை செய்யப்பட்ட தோட்டா வசந்த குமாரிடம் எப்படி வந்தது என்பது குறித்தும் விசாரணை நடத்தி வருகின்றனர்.