மதுரையில் மீன் மற்றும் இறைச்சிக் கடைகள் இன்று திறப்பு!

 

மதுரையில் மீன் மற்றும் இறைச்சிக் கடைகள் இன்று திறப்பு!

கொரோனா வைரஸில் இருந்து மக்களை காக்க நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. அதன் படி உணவு பொருட்கள், மருந்து உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் தவிர மற்ற அனைத்து கடைகளும் மூடப்பட வேண்டும் என்று அரசுஉத்தரவிட்டது. அதன் படி, அனைத்து கடைகளும் மூடப்பட்டுள்ளன. ஞாயிற்றுக் கிழமைகளில் இறைச்சி கடைகளில் கூட்டம் அதிகமாக இருப்பதால் அதற்கு உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டது.

மதுரையில் மீன் மற்றும் இறைச்சிக் கடைகள் இன்று திறப்பு!

இதையடுத்து கொரோனோ தடுப்பு நடவடிக்கையாக வரும் கடந்த மார்ச் மாதம் 19 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை முதல் மதுரை மாவட்டத்தில் உள்ள அனைத்து இறைச்சி, மீன் கடைகளை திறக்க தடை விதித்து மாவட்ட ஆட்சியர் வினய் உத்தரவிட்டார். மக்கள் கூடுவதை தடுக்கும் வகையில் கடைகள் மூடப்படுவதாக மாவட்ட நிர்வாகம் அறிவித்தது. அதனால் கிட்டத்தட்ட 7 வாரங்களாக மீன் மற்றும் இறைச்சிக் கடைகள் மதுரையில் ஞாயிற்றுக் கிழமைகளில் மூடப்பட்டிருந்தன. இந்நிலையில், மதுரையில் மீன் மற்றும் இறைச்சி கடைகள் இன்று திறக்கப்பட்டுள்ளன. அதனால் மக்கள் மகிழ்ச்சியுடன் இறைச்சியை வாங்கிச் செல்கின்றனர்.