நவம்பர் 1ம் தேதி முதல் முதலாம் ஆண்டு வகுப்புகள் தொடங்கும் – மத்திய அரசு

 

நவம்பர் 1ம் தேதி முதல் முதலாம் ஆண்டு வகுப்புகள் தொடங்கும் – மத்திய அரசு

நவம்பர் 1ம் தேதி முதல் முதலாம் ஆண்டு கல்லூரி வகுப்புகள் தொடங்கப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது.

கொரோனா பாதிப்பால் போடப்பட்ட ஊரடங்கு மாணவர்களை வெகுவாக பாதித்திருக்கிறது என்றே சொல்ல வேண்டும். கிட்டத்தட்ட 5 மாதங்களுக்கு மேலாக பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டு இருப்பதால் ஆன்லைன் வழி கல்விமுறையே நாடு முழுவதும் பின்பற்றப்பட்டு வருகிறது. இதனிடையே 10 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களின் பொதுத்தேர்வுகள் தள்ளிப்போனதால் தேர்வு முடிவுகள், கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை என அனைத்தும் தாமதம் ஆனது.

நவம்பர் 1ம் தேதி முதல் முதலாம் ஆண்டு வகுப்புகள் தொடங்கும் – மத்திய அரசு

இது ஒருபுறமிருக்க பிற ஆண்டுகளுக்கு தற்போது ஆன்லைனில் பாடங்கள் எடுக்கப்பட்டு வருவதால், முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு பாடங்கள் எப்போது தொடங்கும் என்ற கேள்வி வெகுவாக எழுந்தது. அதுமட்டுமில்லாமல், சில கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை நிறைவு பெறாமல் இருப்பதால் பாடங்களை நடத்துவது பற்றிய குழப்பம் நீடிக்கிறது.

இந்த நிலையில், அக்டோபர் 31ம் தேதிக்குள் மாணவர் சேர்க்கையை முடிக்குமாறு மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. மேலும், நவம்பர் 1ம் தேதி முதல் முதலாம் ஆண்டு வகுப்புகள் தொடங்கும் என அறிவித்த மத்திய கல்வித்துறை அமைச்சகம் அதற்கான அட்டவணையும் வெளியிட்டுள்ளது.