காதலுக்காக குடும்பத்தையே கொலை செய்த பெண்ணுக்கு தூக்கு!

 

காதலுக்காக குடும்பத்தையே கொலை செய்த பெண்ணுக்கு தூக்கு!

உத்திரபிரதேசத்தில் காதலுக்காக குடும்பத்தையே கொலை செய்த சப்னம் என்பவர் இந்தியாவில் சுதந்திரத்துக்கு பின் தூக்கிலிடப்படும் முதல் பெண் என்ற பெருமை பெறுகிறார்.

அம்ரோ மாவட்டத்தில் உள்ள பாவன்கேடி என்ற பகுதியை சேர்ந்த சப்னம் என்ற பெண், சலீம் என்பவரை காதலித்து வந்துள்ளார். எம்.ஏ படித்து பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்துவந்த சப்னம், வீட்டில் அவரது காதலை ஏற்கவில்லை. காரணம் சலீம் படிக்காதவர். இதனால் சப்னம் கடந்த 2008 ஆம் ஆண்டு தன் காதலருடன் சேர்ந்து தனது குடும்பத்தினர் அனைவருக்கும் மயக்க மருந்து கொடுத்து கொலை செய்தார். இதில் பெற்றோர், இரண்டு அண்ணன்கள், இரண்டு அண்ணிகள், 10 மாத ஆண்குழந்தை ஆகியோர் உயிரிழந்தனர்.

காதலுக்காக குடும்பத்தையே கொலை செய்த பெண்ணுக்கு தூக்கு!

இதுதொடர்பான வழக்கு அம்ரோ மாவட்டத்தில் நடைபெற்றுவந்த நிலையில்,சப்னா மற்றும் சலீமுக்கு தூக்குதண்டனை விதிக்கப்பட்டது. இவர்களது தண்டனையை அலகாபாத் உயர்நீதிமன்றமும், உச்சநீதிமன்றமும் உறுதி செய்தது. தற்போது சலீம் ஆக்ரா சிறையிலும் சப்னம் ராம்பூர் சிறையிலும் அடைக்கப்பட்டுள்ளனர். விரைவில் அவர்களுக்கு டெத் வாரண்ட் வழங்கப்பட்டு, தூக்கிலிடப்படுவர். நிர்பயா கொலையாளிகளை தூக்கிலிட்ட பவான் ஜலாட்தான் சப்னத்தையும் தூக்கிலிடுகிர்றார். இதற்கு முன் இந்தியாவில் 1870 ஆம் ஆண்டு ஆங்கிலேயர் காலத்தில் பெண்கள் சிறையில் தூக்கிலிடப்பட்டனர்.