மும்பைக்கு முதல் வெற்றி. வீழ்ந்தது கோவா!- ISL கால்பந்து திருவிழா

 

மும்பைக்கு முதல் வெற்றி. வீழ்ந்தது கோவா!- ISL கால்பந்து திருவிழா

கால்பந்து ரசிகர்களின் திருவிழாவான ISL போட்டிகள் ரொம்பவே விறுவிறுப்போடு நடந்துகொண்டிருக்கிறது. ஒவ்வொரு நாளும் பாயிண்ட் பட்டியலில் மாற்றங்கள் நிகழ்ந்துகொண்டே இருக்கிறது.

மார்ச் வரை ISL போட்டிகள் நடைபெறும் என்றாலும், ஒவ்வொரு போட்டியின் முடிவும் அரையிறுதிக்குச் செல்ல முக்கியமானதாக இருக்கிறது.

நேற்றைய போட்டியில் கோவா அணிக்கும் மும்பை அணிக்கும் இடையே நடந்தது.. இதில் ஏற்கெனவே தோல்வியைச் சந்தித்த மும்பை அணி பட்டியலில் முன்னேற இன்று வென்றாக வேண்டும். அதேநேரம் கோவா அணியின் முதல் போட்டியும் சமனில் முடிந்ததால், பாயிண்ட் பட்டியலில் ஆறாம் இடத்தில்தான் உள்ளது. அதனால், அதுவும் வெற்றிக்காக் கடுமையாகப் போராடியது.

மும்பைக்கு முதல் வெற்றி. வீழ்ந்தது கோவா!- ISL கால்பந்து திருவிழா

இரு அணிகளும் தாங்கள் கோல் போடுவதற்கு எடுத்த முயற்சிகளைக் காட்டிலும் எதிரணி கோல் போடாமல் பார்த்துக்கொண்டதில் அதிக கவனம் காட்டினர். அதனால், மேட்ச் இறுதிகட்டம் வரை எந்த அணியும் கோல் ஏதும் போடவில்லை.

ஒருவேளை எந்த அணியும் கோல் போடாலமேயே மேட்ச் முடிந்துவிடுமோ என்று யோசிக்க வைத்துவிட்டது. ஆனால், கடைசி நிமிடங்களில் மும்பை அணிக்கு ஒரு பெனாலிட்டி வாய்ப்பு கிடைத்தது. அதை தவற விட மும்பை அணி தயாராக இல்லை. ஏனெனில், அவர்களின் கோல் வாய்ப்பு அது மட்டுமே.

மும்பைக்கு முதல் வெற்றி. வீழ்ந்தது கோவா!- ISL கால்பந்து திருவிழா

மும்பையின் ஆடம் லீ ஃபாண்ட்ரே அதை அழகான கோலாக்கி மும்பைக்கு வெற்றியைத் தேடித்தந்தார். இதனால், மும்பை அணி இரண்டாம் வெற்றியை ருசித்தது.

இந்த சீசனில் முதல் வெற்றி பெற்றிருக்கிறது மும்பை அணி. ஆனால். அது பாயிண்ட் டேபிளில் ஐந்தாம் இடத்தில்தான் உள்ளது. காரணம் அந்த அணியின் கோல்களின் எண்ணிக்கையும் பாயிண்ட் டேபிளில் முக்கிய இடம் வகிக்கும் என்பதால்.