ரோஹித்- சூர்யகுமார் ஜோடி அதிரடி! – மும்பைக்கு முதல் வெற்றி

ரோஹித்- சூர்யகுமார் ஜோடி அதிரடி! – மும்பைக்கு முதல் வெற்றி

ஐபிஎல் போட்டிகள் தொடக்கம் முதலே அனல் பறக்கத் தொடங்கிவிட்டது. ஒவ்வொரு போட்டியும் விறுவிறுப்புடன் நடக்கின்றன.

நேற்றைய போட்டியில் மும்பை இண்டியன்ஸ் அணியோடு கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி மோதின.

ரோஹித்- சூர்யகுமார் ஜோடி அதிரடி! – மும்பைக்கு முதல் வெற்றி

டாஸ் வென்ற கொல்கத்தா கேப்டன் தினேஷ் கார்த்திக் பவுலிங் தேர்வு செய்திருக்கிறார். மும்பை வலுவான அணி. அதனால், டார்கெட் தெரிந்துவிட்டால் அதற்கேற்ப ஆடலாம் என நினைத்த தினேஷ் கார்த்தியின் முடிவு தவறாகி விட்டது.

மும்பை தொடக்க வீரர்களாக டி காக் மற்றும் ரோஹித் ஷர்மா இறங்கினர். ஒரு ரன் எடுத்த நிலையில் டி காக் அவுட்டாக சூர்யகுமார் யாதவ் ஜோடி சேர்ந்தார்.

ரோஹித்- சூர்யகுமார் ஜோடி அதிரடி! – மும்பைக்கு முதல் வெற்றி

இருவரும் நிதானமாக ஆடினாலும் ரன் ரேட் குறையாமல் பார்த்துக்கொண்டனர். 10.5 வது ஓவரில் சூர்யகுமார் யாதவ் 28 பந்துகளில் 47 ரன்கள் விளாசிய நிலையில் விடைபெற்றார்.

தொடர்ந்து ஆடிய ரோஹித் ஷர்மா ஐபிஎல் போட்டியில் தனது 200 வது சிக்ஸரை விளாசினார். . 200 சிக்ஸர்களைக் கடந்த இரண்டாவது இந்தியர் ரோஹித் ஷர்மா. இதற்கு முன் எம்.எஸ்.தோனி 212 சிக்ஸர் விளாசியிருக்கிறார்.

ரோஹித்- சூர்யகுமார் ஜோடி அதிரடி! – மும்பைக்கு முதல் வெற்றி

திவாரி 13 பந்துகளில் 21 ரன்கள் எடுத்த நிலையில் சுனில் நரேன் பந்தில் அவுட்டானதும், ஹிர்த்திக் பாண்டியா உள்ளே வந்தார். 6 சிக்ஸர்களும் 3 ஃபோர்களும் அடித்து 80 ரன்களைக் கடந்த ரோஹித் ஷர்மா சதம் அடிப்பார் என நினைத்த நிலையில் ஷிவம் மாவி பந்தில் அவுட்டானர்.

பொலார்டு 7 பந்துகளில் 13 ரன்கள் எடுக்க அணியின் ஸ்கோர் 195 ஆக உயர்ந்தது. தொடக்கத்தில் இருந்த வேகத்தைப் பார்க்கையில் 200 ரன்களைக் கடக்கும் என்றே கணிக்கப்பட்டது. சூர்யகுமார், ரோஹித் விக்கெட்டுகள் வீழ்ந்ததும் ரன் ரேட் குறைந்தது. ஆனாலும், இதுவும் பெரிய ஸ்கோர்தான்.

ரோஹித்- சூர்யகுமார் ஜோடி அதிரடி! – மும்பைக்கு முதல் வெற்றி

கொல்கத்தா பவுலிங் தரப்பில் ஷிவம் மாவி 2 விக்கெட்டுகள், சுனில், ரஸல் ஆகியோர் தல ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர்.

196 எனும் இலக்கோடு கொல்கத்தா அணியில் ஓப்பனிங் இறங்கிய கில் 7, சுனில் நரேன் 9 ரன்களோடு அவுட்டாகி அதிர்ச்சி அளித்தனர். கேப்டன் தினேஷ் கார்த்திக், ரானாவுடன் ஜோடி சேர்ந்து அதிரடியாக ஆடினார்.

ரோஹித்- சூர்யகுமார் ஜோடி அதிரடி! – மும்பைக்கு முதல் வெற்றி

ராகுல் வீசிய பந்தில் எல்பிடபிள்யூ ஆகி அவுட்டானார் தினேஷ் கார்த்திக். அவர் 23 பந்துகளில் 30 ரன்கள் எடுத்தார். அடுத்த ஓவரிலேயே 24 ரன்கள் எடுத்த நிலையில் ரானாவும் நடையைக் கட்டினார்.   

ஐயன் மோர்கன் – ரஸல் ஜோடி இறங்கியதும் நம்பிக்கை வந்தது. ஆனால், பெரிய ஷாட்கள் எதையும் அவர்களால் அடிக்க முடியவில்லை.  மோர்கன் 16, ரஸல் 11, நாயக் 1 என்று வரிசையாக விக்கெட்டுகள் விழுந்துகொண்டே இருந்தன.

ரோஹித்- சூர்யகுமார் ஜோடி அதிரடி! – மும்பைக்கு முதல் வெற்றி

ஆஸ்திரேலியாவின் பவுலர் கிம்மின்ஸ் 12 பந்துகளில் 33 ரன்களை எடுத்தார். ஷிவம் மாவி. 9, குல்தீப் யாதவ் 1 ரன் எடுத்த நிலையில் ஆட்டம் முடிவுக்கு வந்தது. 20 ஓவர் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 146 ரன்களே கொல்கத்தா அணியால் எடுக்க முடிந்தது.

ரோஹித்- சூர்யகுமார் ஜோடி அதிரடி! – மும்பைக்கு முதல் வெற்றி

மும்பை பவுலிங்கில் பும்ரா தனது ஃபார்ம்க்கு திரும்பியிருக்கிறார், கிம்மின்ஸ் 4 சிக்ஸர்களை விளாசினாலும் 4 ஓவர்களில் 32 ரன்கள் கொடுத்து 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார் பும்ரா. பட்டின்சன், போல்ட், ராகுல் ஆகியோரும் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

ரோஹித்- சூர்யகுமார் ஜோடி அதிரடி! – மும்பைக்கு முதல் வெற்றி

மும்பை இண்டியன்ஸ் அணி 49 ரன்கள் வித்தியாசத்தில் தனது முதல் வெற்றியைப் பதிவு செய்தது. ரோஹித் ஷர்மாவுக்கு பளேயர் ஆஃப் த மேட்ச் கிடைத்தது.