ராய் கிருஷ்ணா அசத்தல் கோல் – முதல் வெற்றி ATK Mohun Baganb-க்கே!

 

ராய் கிருஷ்ணா அசத்தல் கோல் – முதல் வெற்றி ATK Mohun Baganb-க்கே!

ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகளின் வெப்பமே இப்போதுதான் குறைந்திருக்கிறது. இந்நிலையில் பரபரப்பான ISL கால்பந்து திருவிழா தொடங்கி விட்டது. கொரோனா பாதிப்பால் பல போட்டிகள் இந்தியாவில் நடைபெறாமல் ஒத்தி வைக்கப்பட்டிந்தது. இந்நிலையில் பெரிய அளவான போட்டி நேற்று வெற்றிகரமாக கோவாவில் நடந்து முடிந்திருக்கிறது.

நேற்றைய போட்டியில் மோதிய அணிகள் ATK Mohun Bagan vs கேரளா பிளாச்டர்ஸ். ஸ்டார் பிளேயர்ஸைக் கொண்ட அணி ATK Mohun Bagan. எனவே, இதுவே முதல் வெற்றியை ருசிக்கும் எனப் பலராலும் கணிக்கப்பட்டிருந்தது. ஆனாலும், கேரளாவிலும் பல வீரர்கள் மாற்றப்பட்டு புத்துணர்ச்சியோடு ஆட தயராக இருந்தது.

ராய் கிருஷ்ணா அசத்தல் கோல் – முதல் வெற்றி ATK Mohun Baganb-க்கே!

போட்டி ஆரம்பித்து ஒரு மணி நேரமாகியும் இரு தரப்பிலிருந்தும் கோல் ஏதும் அடிக்க வில்லை. இது இன்னும் போட்டியைப் பரபரப்பாக்கியது. ஆட்டத்தின் 67 வது நிமிடத்தில் கேரளா வீரர்களைச் சமாளித்து கண் இமைக்கும் நேரத்தில் கோல் அடித்தார் ராய் கிருஷ்ணா. கால்பந்து ரசிகர்கள் பலரின் ஃபேரைட் வீரர் ராய் கிருஷ்ணா. எந்நேரமும் எதிரணி வீரர்களை ஏமாற்றி கோல் கீப்பரையும் சமாளித்து கோல் அடிக்கக்கூடியவர். சென்ற சீசனில் இவர் பல கோல்களை அடித்திருந்தார்.

ராய் கிருஷ்ணா அசத்தல் கோல் – முதல் வெற்றி ATK Mohun Baganb-க்கே!

ராய்கிருஷ்ணாவின் இந்த கோல் ATK Mohun Bagan அணிக்கு வெற்றியைத் தேடித்தந்திருக்கிறது. இந்தத் தொடரின் முதல் வெற்றியையும் பெற்றுத் தந்திருக்கிறார் ராய் கிருஷ்ணா. இந்த வெற்றி மூலம் ATK Mohun Bagan டீம் 3 புள்ளிகளோடு பாயிண்ட் டேபிளில் முதலிடத்தில் இருக்கிறது. ஆனாலும் இது தொடக்கம்தான் மார்ச் வரை போட்டிகள் நடக்கவிருக்கின்றன. எனவே, எந்த அணியும் பாயிண்ட் டேபிளில் மேலேயும் செல்லலாம். கீழேயும் இறங்கலாம்.