முதல் சட்டப்பேரவை கூட்டத்தொடர்; ஆளுநர் உரையுடன் இன்று தொடக்கம்!

 

முதல் சட்டப்பேரவை கூட்டத்தொடர்; ஆளுநர் உரையுடன் இன்று தொடக்கம்!

தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் அமோக வெற்றி பெற்ற திமுக, கடந்த 7ஆம் தேதி ஆட்சி அமைத்தது. முதல்வராக மு.க ஸ்டாலின் மற்றும் அமைச்சர்கள் பதவி ஏற்றதை தொடர்ந்து எம்.எல்.ஏக்கள் பதவி ஏற்பதற்காக கடந்த மாதம் சட்டப்பேரவை கூடியது. தற்காலிகமாக சபாநாயகராக நியமிக்கப்பட்டிருந்த கு.பிச்சாண்டி தலைமையில் அன்றைய சட்டசபைக் கூட்டம் நடைபெற்றது.

முதல் சட்டப்பேரவை கூட்டத்தொடர்; ஆளுநர் உரையுடன் இன்று தொடக்கம்!

இதையடுத்து, அப்பாவு சபாநாயகராக தேர்ந்தெடுக்கப்பட்டார். கு.பிச்சாண்டி துணை சபாநாயகராக தேர்வு செய்யப்பட்டார். இந்த நிலையில், 16ஆவது சட்டசபையின் முதல் கூட்டத்தொடர் இன்று சென்னை கலைவாணர் அரங்கில் காலை 10 மணிக்கு தொடங்குகிறது. சட்டமன்ற மரபுப்படி, ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்தை சபாநாயகர் அப்பாவு மற்றும் சட்டசபை செயலாளர் சீனிவாசன் அழைத்து வருவார்கள்.

பின்னர் ஆளுநர் தனது உரையை நிகழ்த்துவார். இதில் பல்வேறு முக்கிய அறிவிப்புகள் இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. கூட்டத்தொடர் எத்தனை நாட்கள் நடைபெறும் என்பது இன்னும் முடிவு செய்யப்படாமல் இருக்கும் நிலையில் அவை நிகழ்ச்சிகள் முடிந்த பின் அலுவல் ஆய்வுக் கூட்டம் நடைபெறும். அதில், கூட்டத்தொடரை எத்தனை நாட்கள் நடத்துவது என்பது குறித்து ஆலோசித்து சபாநாயகர் அப்பாவு முடிவுகளை அறிவிப்பார்.