ஒலிம்பிக் வரலாற்றில் முதன்முறையாக… தாங்களே பதக்கம் அணிவித்துக் கொள்ளும் வீரர்கள்!

ஒலிம்பிக் வரலாற்றில் முதன்முறையாக… தாங்களே பதக்கம் அணிவித்துக் கொள்ளும் வீரர்கள்!

உலகமே எதிர்பார்த்துக் காத்துக் கிடந்த ஒலிம்பிக் போட்டியை கொரோனா வைரஸ் முற்றிலுமாக மாற்றியமைத்து விட்டது. கடந்த ஆண்டே நடக்கவிருந்த ஒலிம்பிக் போட்டி கொரோனா பாதிப்பால் இந்த ஆண்டுக்கு ஒத்திவைக்கப்பட்டது. இந்த ஆண்டும் இரண்டாம் அலை பெரும் பாதிப்பை ஏற்படுத்திவிட்டது. எனினும், பாதுகாப்பு நடவடிக்கையுடன் ஒலிம்பிக் போட்டி நடத்தப்படும் என்றும் பார்வையாளர்கள் அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்றும் அதிரடி அறிவிப்பு ஒன்று வெளியானது.

ஒலிம்பிக் வரலாற்றில் முதன்முறையாக… தாங்களே பதக்கம் அணிவித்துக் கொள்ளும் வீரர்கள்!

அதன் படியே பார்வையாளர்கள் இன்றி ஒலிம்பிக் போட்டி நேற்று கோலாகலமாக தொடங்கியது. கலை நிகழ்ச்சிகளுடன் தொடங்கிய ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்க தேர்வான அனைத்து நாடுகளும் தங்களது நாட்டின் கொடிகளுடன் அணி வகுத்துச் சென்றன. இங்கும் கொரோனா சிக்கலை ஏற்படுத்தியது. போட்டிக்கு தேர்வான அனைத்து வீரர்களாலும் அணி வகுப்பில் பங்கேற்க முடியவில்லை. ஒவ்வொரு நாட்டில் இருந்தும் குறிப்பிட்ட வீரர்களே அணி வகுத்துச் செல்ல அனுமதிக்கப்பட்டனர்.

ஒலிம்பிக் வரலாற்றில் முதன்முறையாக… தாங்களே பதக்கம் அணிவித்துக் கொள்ளும் வீரர்கள்!

தொடக்க விழா நேற்று முடிவடைந்ததையடுத்து இன்று காலை முதல் ஒலிம்பிக் போட்டிகள் விறுவிறுப்பாக தொடங்கியது. 119 வீரர், வீராங்கனைகளுடன் களமிறங்கியிருக்கும் இந்தியா தனது முதல் பதக்கத்தை உறுதி செய்தது. ஒலிம்பிக் பளுதூக்கும் போட்டியில் பெண்களுக்கான 49 கிலோ எடைப்பிரிவில் இந்தியாவின் மீராபாய் சானு வெள்ளி பதக்கம் வென்றார். ஒலிம்பிக் போட்டியில் சீனா முதல் தங்க பதக்கத்தை கைப்பற்றியுள்ளது.

ஒலிம்பிக் வரலாற்றில் முதன்முறையாக… தாங்களே பதக்கம் அணிவித்துக் கொள்ளும் வீரர்கள்!

இந்த நிலையில், ஒலிம்பிக் வரலாற்றிலேயே முதன்முறையாக வெற்றி பெற்ற வீரர்கள் தங்களுக்கு தாங்களே பதக்கங்களை அணிவித்துக் கொள்கின்றனர். போட்டியில் வெற்றி பெற்ற வீரர்களுக்கு சிறப்பு விருந்தினர்கள் பதக்கங்களை அணிவிப்பது வழக்கம். ஆனால், கொரோனா காரணமாக இம்முறை வீரர்களே தங்களுக்கு பதக்கங்களை அணிவித்துக் கொள்கின்றனர். இந்த அளவுக்கு ஒலிம்பிக் போட்டியையே மாற்றி அமைத்து விட்டது கொடூர கொரோனா…!