வங்காளதேசத்தில் முதன்முறையாக ரோஹிங்கியா அகதி கொரோனா தொற்றால் உயிரிழப்பு

 

வங்காளதேசத்தில் முதன்முறையாக ரோஹிங்கியா அகதி கொரோனா தொற்றால் உயிரிழப்பு

டாக்கா: வங்காளதேசத்தில் முதன்முறையாக ரோஹிங்கியா அகதி கொரோனா தொற்றால் உயிரிழந்தார்.

வங்காளதேசத்தில் முதன்முறையாக ரோஹிங்கியா அகதி கொரோனா தொற்றால் உயிரிழந்தார். 71 வயதான அவர் கொரோனா வைரஸால் இறந்ததால், அந்த நாட்டில் அகதிகள் முகாம்களில் வசிக்கும் ரோஹிங்கியாக்களில் கொரோனாவால் உயிரிழந்த முதல் அகதியாக மாறியுள்ளார். 2017-ஆம் ஆண்டில் ராணுவத் தாக்குதலுக்குப் பின்னர் மியான்மரில் இருந்து வங்காளதேசத்திற்கு தப்பிச் சென்ற 10 லட்சத்திற்கும் அதிகமான அகதிகளிடையே கொடிய வைரஸ் பரவக் கூடும் அபாயம் இருப்பதாக சுகாதார வல்லுநர்கள் நீண்ட நாட்களாக எச்சரித்து வருகின்றனர்.

வங்காளதேசத்தில் முதன்முறையாக ரோஹிங்கியா அகதி கொரோனா தொற்றால் உயிரிழப்பு

ரோஹிங்கியா பள்ளி ஆசிரியரும், அகதிகள் முகாமை சேர்ந்தவருமான முகமது ஷாஃபி நீண்ட காலமாக உயர் இரத்த அழுத்தம் மற்றும் சிறுநீரக பிரச்சனையால் பாதிக்கப்பட்டிருந்தார். ஆனால் அவர் திடீரென இறந்ததற்கு பின்னர் அவரது உடல் கொரோனா பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டது. இந்நிலையில், நேற்று அவருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டது. இது வங்காளதேசத்தில் உள்ள ரோஹிங்கியா அகதிகள் இடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.